காலில் விழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. என் புருஷன் கிட்ட கேட்டா உனக்கு ஏன் வலிக்குது? ஜாய் கிரிசல்ட்டா விளாசல்!

சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தி இப்போது அது பெரும் பிரச்னையாக மாறி நிற்கிறது. அதாவது, முதல் மனைவி வழக்கறிஞராக இருக்கும் ஸ்ருதி பிரியா. அதேபோல் இரண்டாவது மனைவி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா.

அவர்கள் பிரச்னை ஊர் அறிந்த பிரச்னை என்றாலும், ஜாய் கிரிசல்ட்டாவுக்கு குழந்தை பிறந்த பின்னர் இவர்கள் பிரச்னை மேலும் பூதாகரமாக மாறி உள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிசல்ட்டா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Joy Crizildaa Slams Madhampatty Rangaraj First Wife Shruti Gives Clarification affirmations and screenshots
Photo Credit:

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நான் மாதம்பட்டி ரங்கராஜிடம் உடனே 8 லட்சம் கேட்டதாக ஸ்ருதி கூறுகிறார். நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, அவர் எனது கணவர். எனது தேவைக்கு நான் அவரித்தில்தானே பணம் கேட்கிறேன். என்னோட புருஷனிடம் நான் பணம் கேட்டால் உங்களுக்கு என்ன பிரச்னை? நான் ஒன்றும் அடுத்தவரிடம் கேட்கவில்லை. என்னோட தேவைக்கு என்னோட புருஷன் கிட்ட நான் பணம் கேட்டால் உங்களுக்கு எங்கு வலிக்கிறது.

கோவை வீடு: நான் மாதம்பட்டி ரங்கராஜின் கோயமுத்தூர் வீட்டிற்குச் சென்றுள்ளேன். அவரது அம்மா எனது தாலிக்கு குங்குமம் வைத்து என்னை வாழ்த்தினார். இப்போது தான் அவரது மகன் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் திருமணம் நடைபெற்ற பின்னர், மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடத்தில் சொன்ன வார்த்தைகள், ஸ்ருதிக்கு நாம் திருமணம் செய்து கொண்டது தெரியும். இதில் அவருக்கு ஓ.கே. தான் என்றும் தெரிவித்தார். தொழில் ரீதியாக அவர் எங்காவது சென்றால் கூட என்னை அவரது மனைவி என்றுதான் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

Joy Crizildaa Slams Madhampatty Rangaraj First Wife Shruti Gives Clarification affirmations and screenshots
Photo Credit:

காலில் விழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்: மாதம்பட்டி ரங்கராஜ் அவ்வப்போது என்னிடத்தில் பொய் சொல்லி மாட்டிக் கொள்வார். அப்போது எல்லாம் எனது காலில் விழுந்தும், கட்டிப் பிடித்தும் அழுது புரண்டு சமாதானப்படுத்துவார். நான் மெசேஜ் அனுப்பியதாக ஸ்ருதி பகிர்ந்துள்ள வாட்ஸ் ஆப் சாட்கள் எல்லாம் அவர் சொல்ல சொல்ல நான் டைப் செய்து ஸ்ருதிக்கு அனுப்பியவை. இந்த கான்வர்சேஷன் நடக்கும்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தான் இருக்கிறார்.

பொசசிவ்: மாதம்பட்டி ரங்கராஜ்க்கு எப்போதும் என்மீது பொசசிவ் ரொம்பவும் அதிகம். நான் யார் இடத்திலாவது கொஞ்சம் சிரித்து பேசினாலோ, இயல்பாக கட்டி பிடித்தால் கூட அவருக்கு ரொம்பவும் பொசசிவ் வந்துவிடும். உடனே மாதம்பட்டி ரங்கராஜின் முகம் வாடி விடும். எனது வாட்ஸ்-ஆப் முகப்பு புகைப்படம் கூட அவரது பொசசிவால் தான் இப்போதும் நாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X