தங்கம் வந்துடுறேனு சொல்லிட்டு போனாரு.. அவ்வளவுதான்.. மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா வேதனை
சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த விவகாரம்தான் கடந்த சில மாதங்களாக கோலிவுட்டின் தலைப்பு செய்திகளில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. கிரிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு ரங்கராஜிடம் தீவிரமான விசாரணையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ஜாய் கிரிஸில்டா. இவர் ஏற்கனவே பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் பெட்ரிக் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்கும் பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது என்றும் தெரிகிறது.
இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க அந்தக் காதலை அவர்கள் இரண்டு பேருமே திருமணத்தில் முடித்திருக்கிறார்கள். அதுதொடர்பான ஆதாரங்களை கிரிஸில்டா புகைப்படங்களாக வெளியிட்டார். மேலும் தன்னிடம் குழைந்து பேசும் ரங்கராஜின் வீடியோக்களையும் அவர் பகிர்ந்திருந்தார். அதேசமயம் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் மாதம்பட்டியார். இது ஜாயை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

புகார் அளித்த கிரிஸில்டா: இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார் ஜாய். புகார் அளித்த சில நாட்களிலேயே மாதம்பட்டியாரும் தனது பங்குக்கு ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் ஜாய் முன்வைத்தார்.
நடந்த விசாரணை: நாளொரு காட்சியாக இந்த விவகாரம் மாறிக்கொண்டே இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தப் புகாரின் அடிப்படையில் ரங்கராஜிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டார்கள் காவல் துறையினர். அப்போது ஜாய் அளித்த புகார் குறித்தும்; உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும் கேள்விகள் மேல் கேள்விகளை ரங்கராஜிடம் போலீஸ் முன்வைத்ததாகவும்; அதற்கு அவர் பொறுமையாக பதிலளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஜாயின் பேட்டி: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில், "ஜூலை 16ஆம் தேதி அவர் என்னிடம்,'தங்கம் எல்லாத்தையும் எடுத்து வை வந்துவிடுகிறேன்' என சொல்லிவிட்டு சென்றார். குக் வித் கோமாளி ஷூட்டிங்கிற்கு சென்றால் எப்போதும் மிட் நைட்டில்தான் வீட்டுக்கு வருவார். இந்த முறையும் வந்துவிடுவார் என்றே நினைத்திருந்தேன். நள்ளிரவு நேரம் ஆகியும் வரவில்லை. உடனடியாக ட்ரைவருக்கு ஃபோன் செய்து கேட்டேன்.
ப்ளாக் செய்துவிட்டார்: அதற்கு ட்ரைவரோ, கார் சாவியை கொடுத்துவிட்டு சார் மேனேஜரோடு போய்விட்டார் என்று சொன்னார். என்ன ஆனதென்று தெரியவில்லை. உடனே நான் ரங்கராஜுக்கு ஃபோன் செய்தேன். அவரோ எனது நம்பரை ப்ளாக் செய்து வைத்திருந்தார்" என்றார். அவரது இந்தப் பேட்டி திடீரென ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











