மௌனம் கலைத்த மாதம்பட்டி ரங்கராஜ்.. வடிவேலு பாணியில் வைத்து செய்த ஜாய் கிரிஸில்டா.. ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்த விவகாரத்தில் இத்தனை நாட்கள் அமைதியாக மாதம்பட்டியார் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு இந்த விஷயம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. ஆனால் ஜாய் கிரிஸில்டாவோ சகட்டுமேனிக்கு ரங்கராஜை வைத்து செய்துவருகிறார்.

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 'மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இவ்விவகாரம் பற்றி எரிந்தலும் சம்பந்தப்பட்ட ரங்கராஜோ அமைதியே காத்து வந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று அவர் தனது மௌனத்தை கலைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மாதம்பட்டியின அறிக்கை: அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

Joy Crizildaa tells Madhampatty Rangaraj to come to the police station first
Photo Credit:

இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த விளக்கத்துக்கு பிறகு இப்பிரச்னை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

ஜாய் கிரிஸில்டாவின் பதிவு: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது விளக்கத்தை அளித்ததை அடுத்து ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Hello Husband மாதம்பட்டி ரங்கராஜ் நீங்கள் முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க.. விசாரணைக்கு வாங்க.. சட்டம் தன் கடமையை செய்யும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, மாதம்பட்டி ரங்கராஜ் எதை செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு உடனுக்குடன் ஜாய் பதிலடி கொடுத்துவருகிறாரே.. ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார். அதுமட்டுமின்றி ஒரு படத்தில் வடிவேலு, நீங்கள் தைரியமான ஆளாச்சே வந்து பாருங்க என்று சொல்வது போல் இருக்கிறது ரங்கராஜை கலாய்த்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X