மாதம்பட்டி ரங்கராஜ் ஊரில் மகனுடன் இறங்கிய ஜாய் கிரிஸில்டா.. என்ன செய்யப்போறாரோ?.. இது எப்போ முடியும்?

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டா; ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நிரூபியுங்கள் என கேட்டிருந்தார் ரங்கராஜ். அப்படி கேட்டவர்; இன்றுவரை அந்த சோதனைக்கு வரவில்லை. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேருக்குமே ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஜாய் கிரிஸில்டா தனது முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். ரங்கராஜ் அப்படி எதுவும் செய்யவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி திருமணத்தில் முடிந்து ஜாய் கிரிஸில்டா கர்ப்பமாகவும் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையில் அளித்த புகார்: ஆனால் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக கிரிஸில்டா புகார் கொடுத்ததை அடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. முதலில் இதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரங்கராஜ்; தன் மீது தொடர்ந்து ஜாய் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஏதேதோ முயற்சிகளை மேற்கொண்டார். எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. கிரிஸில்டாவும் விடுவதாக இல்லை. ஒருவழியாக தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜரானார் மாதம்பட்டியார்.

Joy Crizildaa Visits Coimbatore With Son Fresh Twist in Mathampatty Rangaraj Dispute
Photo Credit:

ஆண் குழந்தை: இதற்கிடையே ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. பிறகு நடந்த விசாரணையின்போது, தன்னை மிரட்டி திருமணம் செய்துகொள்ள வைத்தார். பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ டெஸ்ட் எடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அப்படி சொன்னவர் உடனடியாக அந்த சோதனைக்கு வருவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போதுவரை அந்த சோதனைக்கு வரவில்லை. ஜாயும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டார்.

புதிய புகார்: அதேபோல் சமீபத்தில் புதிய புகாரையும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்தார் ஜாய் கிரிஸில்டா. அந்தப் புகாரில் என்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தற்போது குடியிருக்கும் வீட்டுக்கான ஒப்பந்தம் 2026 பிப்ரவரியுடன் முடிவடைகிறது. அதுமட்டுமின்றி என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள பணம் தேவைப்படுவதால் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார்.

ட்ரெண்டாகும் போஸ்ட்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜின் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு தனது மகன் ராகா ரங்கராஜுடன் சென்றிருக்கிறார் அவர். அதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, 'ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜின் ஊரு கோயம்புத்தூரில்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எதற்காக அவர் அங்கு சென்றிருக்கிறார் என்பதை குறிப்பிடவில்லை. அதேசமயம் இதை பார்த்த ரசிகர்கள், கோவையில் இறங்கியிருக்கும் ஜாய் என்ன செய்யப்போகிறாரோ என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சீக்கிரம் இந்தப் பிரச்னையை முடியுங்கள் ப்பா என்ற கமெண்ட்ஸையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X