தொடர்ந்து ஒதுக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. கூலாக நடந்த ஜாய் கிறிஸில்டா வளைகாப்பு?.. சோர்ந்துட்டாராம்
சென்னை: வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிஸில்டா அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களில் அவரும், மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செய்துகொள்ளும்படி இருந்தது. இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். ரங்கராஜ் ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் இந்த செயலில் ஈடுபட்டது பெரிய பேசுபொருளாக ரசிகர்களிடையே மாறியது.
தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிஸில்டா பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஃபெட்ரிக்கை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். சூழல் இப்படி இருக்க அவருக்கும், பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடந்தது. ரங்கராஜ் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தந்தையாக இருக்கிறார். விவாகரத்தும் பெறவில்லை.
பெரும் சர்ச்சை: அப்படி இருக்கும்போது இந்த இரண்டாவது திருமண புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் ரங்கராஜையும், ஜாய் கிரிஸில்டாவையும் கழுவி கழுவி ஊற்றினார்கள். நிலைமை இப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியில் முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துகொண்டார் ரங்கராஜ். அது இவ்விவகாரத்தில் மேலும் புகைச்சலை உண்டு செய்தது. சூழல் இவ்வாறு இருக்க திடீரென காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து, 'ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்' என்று புகார் கொடுத்தார் ஜாய் கிரிஸில்டா.

தொடர் பஞ்சாயத்து: மேலும் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் எனவும், எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்றும் கூறினார். இதனால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. ரங்கராஜ் அமைதி காக்க; விடாத ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தனக்கு முத்தம் கொடுத்தது, தன்னிடம் வழிந்து வழிந்து பேசியது, சேர்ந்து சென்ற சுற்றுலா தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிர்ந்தார்.
கடுப்பான ரங்கராஜ்: இப்படியே சைலென்ட்டாக இருந்தால் இந்த விஷயம் நீர்த்து போய்விடும் என்று இருந்த ரங்கராஜ்; கிரிஸில்டாவின் செயலை பார்த்து கடுப்பாகிவிட்டார். உடனடியாக நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் கிரிஸில்டா விடுவதாக இல்லை. மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு நீதி கிடைக்கும். ரங்கராஜ் தன்னுடைய செல்வாக்கை வைத்து அதனை தடுக்க பார்க்கிறார் என்று அதிரடியாக கூறினார்.
வளைகாப்பு?: இப்படி தினமும் அவர்களை சுற்றி ஏதாவது நடந்துகொண்டிருக்கும் நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருகிறார். அதில் அவர் கை நிறைய கலர் கலராய் வளையல்களை அணிந்தபடி இருக்கிறார். மேலும் சோர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்களோ ஒருவேளை வளைகாப்பு முடிந்துவிட்டதோ; அதைத்தான் இப்படி சூசகமாக சொல்கிறாரோ என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











