ஒரே நேரத்தில்.. ஜாய் கிரிஸில்டா ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல.. சும்மா கலக்குறாங்களே பாஸ்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சொல்லி கடந்த வருடத்தில் புகார் அளித்தார் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. ரங்கராஜுக்கும் ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடந்தது. ஜாய் கொடுத்த புகார் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு மாதம்பட்டியார் இன்னமும் டிமிக்கி கொடுத்துவருகிறார். இந்நிலையில் கிரிஸில்டாவின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ்; தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வருடம் புகார் கொடுத்தார் ஜாய் கிரிஸில்டா. ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கும் ரங்கராஜ்; சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். மேலும் விவிஐபி வீட்டு விசேஷங்களுக்கு எல்லாம் இவர்தான் சமையல். இதனால் ரொம்பவே பிரபலமானவர். ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

Joy Crizildaa s Fire amp amp Grace Post Goes Viral Amid Madhampatty Rangaraj Controversy
Photo Credit:

ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்: இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ரொம்பவே சைலெண்ட்டாக இருந்தார் மாதம்பட்டி. நிலைமை கை மீறி போவதை உணர்ந்த; ஜாயின் வாயை அடைக்க ஏகப்பட்ட முயற்சிகளை செய்தார். ஆனால் அது எதுவும் கைகொடுக்கவில்லை. அதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மகளிர் ஆணையத்திடம் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜரானார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்தார். இந்த விஷயத்தில் ரங்கராஜுக்கு முதல் மனைவி ஸ்ருதி முழு சப்போர்ட்டையும் செய்துவருகிறார். அது கண்டனத்தை சம்பாதித்தது.

டிஎன்ஏ டெஸ்ட் கேட்ட ரங்கராஜ்: அந்த விசாரணையின்போது, தன்னை மிரட்டி திருமணம் செய்துகொள்ள வைத்தார்கள். பிறந்திருக்கும் குழந்தை மட்டும் என்னுடையதுதான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபித்தால் சாகும் வரை அந்தக் குழந்தையை பாதுகாக்க தயார் என கூறினார். இதன் காரணமாக விரைவிலேயே இந்தப் பிரச்னை எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே செல்கிறது. மரபணு பரிசோதனைக்கு வேண்டிய அவர்; இன்னமும் டெஸ்ட்டில் பங்கேற்கவில்லை.

Also Read
திருமணத்துக்கு பிறகு சூப்பர் ஃபீலிங்.. சங்கீதா பற்றி விஜய் பெருமிதம்.. இப்படியும் நினைச்சிருக்காரே
திருமணத்துக்கு பிறகு சூப்பர் ஃபீலிங்.. சங்கீதா பற்றி விஜய் பெருமிதம்.. இப்படியும் நினைச்சிருக்காரே

மகனின் முகம்: இதற்கிடையே டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வராத அவரை ஜாய் கிரிஸில்டா கோபமாக திட்டிவிட்டார், கிண்டலாக பேசிவிட்டார். ஆனால் ரங்கராஜ் கொஞ்சம்கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. இது ஒருபக்கம் இருக்க தனது மகன் ராகாவுடன் உச்சக்கட்ட நிம்மதியில் வாழ்ந்துவருகிறார். இத்தனை காலம் தனது மகனின் முகத்தை பொதுவெளிக்கு காண்பிக்காமல் இருந்தார். சில நாட்களுக்கு முன்புதான் அதை ரிவீல் செய்தார். பார்க்கும் அனைவருமே ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் என அழைப்பதாகவும் பெருமிதப்பட்டார்.

ட்ரெண்டாகும் போஸ்ட்: மேலும் ரங்கராஜ் மாதிரி எனது மகன் இருப்பது சந்தோஷம்தான். அதுவும் ஒருவகையில் ஆதாரம்தானே எனவும் ஒரே போடாக போட்டார். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. தனது புகைப்படத்தை பகிர்ந்த அவர் அதற்கு கேப்ஷனாக, 'ஒரே நேரத்தில் நெருப்பாகவும், அழகாகவும் இருப்பவள் அவள்' என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X