Odisha Train Accident: 288 பேர் பலி.. உடைந்து போய் விட்டேன்.. ஜூனியர் என்டிஆர், ஜிவி பிரகாஷ் ட்வீட்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், ஒவ்வொரு சினிமா பிரபலமும் செய்தி அறிந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

டோலிவுட்டின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த கோர ரயில் விபத்து ஏற்படுத்திய தாங்க முடியாத சேதம் குறித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், பல திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், ரயில் விபத்தின் கொடூர காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் வேதனையை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழர்கள் நிலை என்ன: 3 ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் நிலை குறித்து தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 288 பேர் பலியாகி உள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி மக்களை பதை பதைப்பில் ஆழ்த்தி உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு விபத்து குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர் உருக்கம்: இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனைகளை நினைத்து மனம் வருந்துகிறேன் என நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jr NTR and GV Prakash condoled for Odisha Train Accident deaths

ஜிவி பிரகாஷ் வேதனை: ஒடிசா ரயில் விபத்து செய்தி அறிந்து மனம் உடைந்து விட்டேன். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jr NTR and GV Prakash condoled for Odisha Train Accident deaths

ரசிகர்கள் இரங்கல்: சினிமா பிரபலங்கள் தொடர்ந்து ரயில் விபத்துக்கு கருத்துக்களையும் இரங்கல்களையும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் இரங்கல் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X