ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் RRR படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

மே 20ம் தேதி தனது 39வது பிறந்தநாளை நந்தமுரி தாரக் ராமராவ் ஜூனியர் கொண்டாடுகிறார்.

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தை இயக்குநர் கொரட்டல சிவா இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Jr NTR announces his next movie director on behalf of his birthday

என்.டி. ராமராவின் பேரனான ஜூனியர் என்டிஆர் டோலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக நடித்து அசத்தி வருகிறார். 1983ம் ஆண்டு மே 20ம் தேதி நந்தமுரி ஹரிகிருஷ்ணா மற்றும் நந்தமுரி ஷாலினிக்கு மகனாக பிறந்தவர் ஜூனியர் என்.டி.ஆர்.

1991ம் ஆண்டு தாத்தா நடிப்பில் வெளியான பிரம்மரிஷி விஸ்வாமித்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜூனியர் என்டிஆர். தொடர்ந்து ராமாயணம் படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2001ம் ஆண்டு ஹீரோவாக நின்னு சூடலானி, ஸ்டூடண்ட் நம்பர் 1, சுப்பு என தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து டோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார்.

2007ம் ஆண்டு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான யமதொங்கா படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். பின்னர், பல ஆண்டுகள் கழித்து ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து இவர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தந்தது.

Jr NTR announces his next movie director on behalf of his birthday

உலகளவில் ஒட்டுமொத்தமாக 1130 கோடிக்கும் மேல் ஆர்ஆர்ஆர் படம் வசூலித்தது. அந்த படத்தில் கொமுரம் பீம் கதாபாத்திரத்தில் உணர்ச்சி பூர்வமாக நடித்து மிரட்டி இருந்தார் ஜூனியர் என்டிஆர். ராம்சரணிடம் சாட்டையால் அடி வாங்கும் காட்சிகளில் எல்லாம் ஜூனியர் என்டிஆருக்குத் தான் பாராட்டுக்கள் கிடைத்தன.

இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த படத்தை யார் இயக்கப் போவது யார் இசையமைக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த ஆச்சார்யா படத்தை இயக்கிய டோலிவுட்டின் பிரபல இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் தான் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக போகிறது.

Jr NTR announces his next movie director on behalf of his birthday

இந்த படத்திற்கு கோலிவுட்டின் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். அவரது பின்னணி இசையில் உருவாகி உள்ள மோஷன் போஸ்டர் தற்போது தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. கையில், கத்தி மற்றும் கோடரி வைத்துக் கொண்டு மரண சம்பவத்தை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

ராம்சரண் படம் மிஸ் ஆன நிலையில், நிச்சயம் இந்த படத்தை ஹிட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கொரட்டல சிவா.

மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பரத் எனும் நான், ஸ்ரீமந்துடு மற்றும் டோலிவுட் பிளாக்பஸ்டர் படமான ஜனதா காரேஜ் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கி உள்ளார்.

ரத்னவேலு ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், சாபு சிரில் புரொடக்‌ஷன் டிசைன் என தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஜூனியர் என்டிஆர் 30வது டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரு என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X