Game Changer: கேம் ஓவர்.. அன்பிரெடிக்டபிள்னு சொல்லிட்டு.. எல்லாமே கணிக்க முடிஞ்சா எப்படி ஷங்கர்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் எல்லாம் அவுட்டேட்டட் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரை நம்பி முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பாளர்களும் எப்படித்தான் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்களோ தெரியவில்லை என கேம் சேஞ்சர் படத்துக்கு எதிராக கேம் ஓவர் என்கிற ஹாஷ்டேக்கை டோலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கேம் சேஞ்சர் டிரெய்லரில் நடிகர் ராம் சரண் 'I am Unpredictable' என சொல்லும் வசனம் இருக்கும். அந்தளவுக்கு படத்தின் காட்சிகள் யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என நினைத்து ரசிகர்கள் படத்தை போய் பார்த்தால் எல்லா காட்சிகளும் பிரெடிக்ட் பண்ண முடிகிற லட்சணத்தில் தான் ஷங்கர் எடுத்து வைத்திருக்கிறார் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

game changer ram charan game changer troll

ராம் சரண் மீண்டும் ராஜமெளலி உடன் இணைந்தால் தான் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை எல்லாம் பார்க்க முடியும் என்றும் அவ்வளவு தான் போங்க நம்மள முடிச்சிவிட்டாய்ங்க போங்க என ராம் சரண் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

டிரெண்டாகும் கேம் ஓவர்: #GameOver ஹாஷ்டேக்கை ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் படு சுமார் ரகம் என்றும் படத்தில் எந்தவொரு புதுமையும் இல்லை. வெத்து பிரம்மாண்டம் வேலைக்கு ஆகாது என ரசிகர்கள் ஷங்கரை போட்டு மீண்டும் பொளந்து வருகின்றனர். கோலிவுட் ரசிகர்கள் இந்தியன் 2வை விளாசிய நிலையில், டோலிவுட்டிலும் ஷங்கர் இந்தளவுக்கு வறுபடுகிறாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


மொத்தமும் பிரெடிக்டபிள்: கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் தன்னை கணிக்க முடியாதவர் என அன்பிரெடிக்டபிள் என்கிற வசனத்தை எஸ்.ஜே. சூர்யாவுடன் செம கெத்தாக சொல்லும் காட்சியை டிரெய்லரில் எல்லாம் வைத்து ஹைப் ஏற்றியிருந்தார் ஷங்கர். ஆனால், படம் எப்படி எல்லாம் நகரும், எப்படி முடியும் என அனைத்தையுமே கணிக்க முடிகிறது என்றும் கதை மற்றும் திரைக்கதை ரொம்பவே வீக்காக உள்ளது. முதல்வன் படம் அளவுக்கு எல்லாம் கேம் சேஞ்சர் இல்லை. ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி போகாதீங்க எனக் கூறி வருகின்றனர்.

பாலய்யா ஹேப்பி அண்ணாச்சி: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் பந்தயம் அடிக்கத் தவறினால் அது பாலகிருஷ்ணாவுக்குத்தான் இந்த சங்கராந்தி ஜாக்பாட் என்கின்றனர். அவர் நடித்துள்ள டாக்கு மகராஜ் படமும் ரிலீஸ் ஆகும் நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலை அவர் தட்டித் தூக்கப் போகிறார் என பாலகிருஷ்ணா ஆர்மியும் அந்த ஹாஷ்டேக்கில் கேம் சேஞ்சர் படத்தை கேம் ஓவர் என ட்ரோல் செய்து வருகிறது.

அல்லு அர்ஜுன் பக்கம் கூட வரமுடியாது: ராஜமெளலியே எங்களுக்குத் தேவையில்லை. சுகுமார் இயக்கத்திலேயே புஷ்பா 2 படம் மூலம் 1850 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டோம். எங்க அல்லு அர்ஜுன் பக்கம் எல்லாம் ராம் சரண் கனவில் நினைத்தால் கூட வரமுடியாது என அந்த சைடில் இருந்தும் ரசிகர்கள் அடி வெளுத்து வருகின்றனர். கேம் சேஞ்சர் படம் மோசம் எல்லாம் கிடையாது என்றும் மாஸ் மசாலா படம் தான் என்றும் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X