ரசிகரின் மரணத்தில் சந்தேகம்..உரிய விசாரணை தேவை..ஜூனியர் என்டிஆர் கோரிக்கை!
ஹைதராபாத்: ரசிகர் ஷ்யாமின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜூனியர் என்டிஆர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
20 வயதான ஷியாம் ஜூனியர் என்டிஆரின் மீது அபரிமிதமான அன்பை வைத்திருந்தார். ஜூனியர் என்டிஆர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அங்கு தவறாமல் கலந்து கொள்வார்.
அவரின் எந்த படம் வெளியானாலும் முதல் ஆளாக, முதல் காட்சியை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் தவறாமல் பார்த்துவிடுவார். அவரை ஜூனியர் என்டிஆரின் ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஜூனியர் என்டிஆரின் ரசிகர்: இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிந்தலுரு கிராமத்தில் வசிக்கும் ஷ்யாம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது ஆனால் ஷ்யாமின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஷ்யாம் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும்,குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஷ்யாம் தற்கொலை: அதுமட்டுமில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை இல்லை. இதனால், ஷ்யாமின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்று போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். மேலும், ஷ்யாமின் மரணம் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி '#WeWantJusticeForShyamNTR' என்ற ஹேஷ்டேக் வைரலானது.
ஜூனியர் என்டிஆர் இரங்கல்: இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தனது ரசிகர் ஷ்யாமின் மரணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஷ்யாம் மரணம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
உரிய விசாரணை தேவை: எந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவரது மர்ம மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஷ்யாமின் மரணத்திற்கு நீதி கேட்டு திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











