Devara Box Office: கோட் முதல் நாள் வசூலை முறியடித்த ஜூனியர் என்டிஆரின் தேவரா.. இத்தனை கோடி வசூலா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று வெளியான தேவரா திரைப்படம் முதல் நாளில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் மட்டும் சுமார் 95 கோடி வசூலை முதல் நாளில் தேவரா திரைப்படம் பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவரா படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனங்கள்: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த தேவரா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சினிமா விமர்சகர்கள் மூலமாகவும் எழுந்துள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு தரமான படத்தை கொரட்டலா சிவா கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன.
வசூலில் வெறித்தனம்: விஜய், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்கள் விமர்சன ரீதியாக எந்த அளவுக்கு அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக வெளியான ஒரு சில நாட்களில் மிகப்பெரிய கலெக்ஷன்களை அள்ளி விடுகின்றன. தேவரா திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 95 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாகவும் உலகம் முழுவதும் 128 கோடிக்கும் அதிகமான வசூலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவரா படத்தை தயாரித்த நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக 130 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை தேவரா திரைப்படம் செய்ததாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

300 கோடி பட்ஜெட்: மிகப்பெரிய பொருட்செலவில் 300 கோடி பட்ஜெட்டில் உருவான தேவரா திரைப்படம் ஃபிளாப் ஆகாது என்றும் முதல் 3 நாட்களிலேயே 250 கோடி வசூலை தேவரா திரைப்படம் அள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவரா 2ம் பாகத்தை இதை விட சிறப்பாக கொரட்டலா சிவா கையாள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
கோட் வசூல் முந்தியாச்சு: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வசூலை ஈட்டிய நிலையில், ஜூனியர் என்டிஆரின் தேவரா திரைப்படம் அனிருத்தின் இசையுடன் சேர்ந்து கோட் முதல் நாள் வசூலை முந்திவிட்டதாக கூறுகின்றனர். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 212 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கல்கி 2898 ஏடி வசூலை தேவரா முறியடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











