Devara pre booking: சோலோ சிங்கமாக மாறிய ஜூனியர் என்டிஆர்.. தேவரா முன் பதிவிலேயே வசூல் வேட்டை!
சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தேவரா படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை புரிந்தது.
இந்நிலையில், சோலோவாக ஜூனியர் என்டிஆர் களமிறங்கியுள்ள தேவரா படம் எந்தளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. படத்தின் ப்ரீ புக்கிங் சேல்ஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் ஓபனிங்கை தேவரா செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் என்டிஆரின் தேவரா: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தென்னிந்தியாவில் அவர் நடிக்கும் முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக தேவரா உருவாகியுள்ள நிலையில், இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் படு ஹிட்டாக அமைந்துள்ளது.
50 கோடி ப்ரீ சேல்: இந்தியளவில் இதுவரை 30 கோடி ரூபாய்க்கு டிக்கெட் முன் பதிவு நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியளவில் அதிகபட்சமாக 6.88 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆந்திராவில் டிக்கெட் விலையை அதிகரித்துக் கொள்ள பவன் கல்யாண் அனுமதியளித்த நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை தேவரா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வரை ப்ரீ சேல் நடந்துள்ள நிலையில், டிக்கெட் முன் பதிவில் மட்டும் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை இப்பவே தேவரா அள்ளியுள்ளதாக கூறுகின்றனர்.

100 கோடி ஓபனிங்: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியை அதிகம் டார்கெட் செய்து தேவரா படம் வெளியாக உள்ள நிலையில், இந்தியிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவரா படம் வெளியாகும் நாளில் நிச்சயம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் முதல் நாளில் படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்: ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 213 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக சோலோ ரிலீஸாக ஜூனியர் என்டிஆர் நடித்த அரவிந்த சமேத வீர ராகவா திரைப்படம் அதிகபட்சமாக முதல் நாளில் 58 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகளில் ஜூனியர் என்டிஆரின் மார்க்கெட் அதிகரித்துள்ள நிலையில், தேவரா திரைப்படம் பெரிய கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு முதலிடம்?: இந்த ஆண்டு தெலுங்கில் இதுவரை பிரபாஸின் கல்கி திரைப்படம் தான் 1000 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ஜூனியர் என்டிஆரின் தேவரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











