Devara X Review: ஜூனியர் என்டிஆர் தேவரா படம் எப்படி இருக்கு?.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா?

சென்னை: கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் நடித்துள்ள தேவரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அந்த படத்தை காலை முதலே ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் வெறித்தனமாக தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

படத்தை பார்த்த பலரும் தலைவலி வந்தது தான் மிச்சம் என தலை தெறிக்க ஓடி வருவதாக சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனங்களை காலையில் இருந்தே கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

devara review jr ntr

ஜூனியர் என்டிஆர் மற்றும் அனிருத்தின் பில்டப் பிஜிஎம்மை தவிர படத்தில் பெரிதாக எதுவுமே இல்லை என்றும் தேவரா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஆளவிடுங்கடா சாமி: கொரட்டல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்து வெளியான ஆச்சார்யா திரைப்படமே படுதோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் வான்டட்டாக அந்த இயக்குநருடன் தான் படம் பண்ணுவேன் என ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு சென்று ஜூனியர் என்டிஆரும் ஒரு ஃபிளாப் படத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். முதல் பாதி சுமாராகவும், இரண்டாம் பாதி படு மோசமாகவும் இருப்பதாக ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்துள்ளன. இதில், அடுத்த பாகம் வேறு பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் தெரியுமா? என்கிற ரேஞ்சுக்கு லீடு கொடுத்து வைத்திருக்கிறார்களாம்.

devara review jr ntr

தேவரா தெறிக்குது: ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் தேவரா படத்தில் மிரட்டி எடுத்துள்ளார். அவருடைய நடிப்புக்காகவே படத்தை தியேட்டர்களில் கொண்டாடலாம். ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே டாப் கிளாஸாக உள்ளது. கண்டிப்பாக தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் இது என இந்த ரசிகர் தேவரா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்.

devara review jr ntr

அண்டர்வாட்டர் சீக்வென்ஸ்: தேவரா படத்தில் இடம்பெற்றுள்ள அண்டர்வாட்டர் சீக்வென்ஸ் எல்லாம் வேறலெவலில் படமாக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆரின் ஆக்‌ஷன் அதகளத்திற்காகவே படத்தை பார்க்கலாம். தாரக் பீஸ்ட் மோடில் எதிரிகளை வேட்டையாடுகிறார் என அவரது ரசிகர்கள் படத்திற்கு பக்க பலமாக விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

devara review jr ntr

ஒரு நல்ல சீன் கூட இல்லை: இயக்குநர் கொரட்டல சிவா மறுபடியும் மாஸ் ஹீரோவை வைத்து மோசம் செய்து விட்டார். செகண்ட் ஹாஃபில் ஒரு ஹை பாயிண்ட்ஸ் கூட படத்தில் இல்லை. அனிருத் ஸ்கோர் செய்யவும் எந்தவொரு ஸ்பேஸையும் அவர் கொடுக்காமல் படத்தை போர் அடிக்க வைத்து விட்டார். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்ற நல்ல இயக்குநர்களுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் தரமான படங்களை கொடுப்பார் என நம்புவதாக இந்த நெட்டிசன் கடுமையாக தேவரா படத்தை விமர்சித்துள்ளார்.

devara review jr ntr

ஜான்வி கபூருக்கு வேலையே இல்லை: தேவரா படத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஜான்வி கபூரின் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. சுட்டமல்லி பாடலில் மட்டுமே அவர் ஸ்கோர் செய்துள்ளார். சைஃப் அலி கானை வழக்கமான முதுகில் குத்தும் வில்லனாகவே பயன்படுத்தியிருப்பது ரொம்பவே மோசமான விஷயம். கதை மற்றும் திரைக்கதையில் கொரட்டலா சிவா கோட்டை விட்டு விட்டார் என ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

devara review jr ntr

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X