Devara Box Office Collection Day 2: ஜூனியர் என்.டி.ஆர் காட்டில் கோடிகளில் பண மழை.. கலெக்ஷன் விபரம்!
ஹைதராபாத்: சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாரானது. இது கடந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் தனது முதல் படத்திலேயே பாரபட்சமின்றி கிளாமர் விருந்து வைத்துள்ளது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறும் அளவிற்கு பாடல்களில் செம கிளாமராக நடித்துள்ளார். குறிப்பாக பத்தவைக்கும் பாடலின் லிரிக் வீடியோவில் இடையிடையே வரும் பாடலின் ஒரிஜினல் வீடியோவில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளில் ஜான்வி கபூர் தாராளமாக கிளாமர் காட்டியுள்ளார். இவரது கிளாமர் காட்சிகளை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜான்வி கபூரின் கிளாமர் காட்சிகளுக்காகவே பல ரசிகர்கள் படம் பார்க்கச் சென்றுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த மாஸ் ஓப்பனிங்கினைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் செம குஷியில் உள்ளனர். குறிப்பாக இந்தியாவைக் கடந்து பல நாடுகளிலும் தேவரா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அமெரிக்காவில் ஒரு தியேட்டரை முற்றிலுமாக தங்களது கொண்டாட்டத்தின் மூலம் வேறு ஒரு இடமாக மாற்றிவிட்டார்கள் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.

இரண்டு பாகம்: தேவரா படம் முதலில் முதல் பாகமாகத்தான் எடுக்கத் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் படத்தின் நீளத்தினைக் கருத்தில் கொண்டு இரண்டு பாகங்களாக பிரித்ததாகவும் படக்குழு ஏற்கனவே தெரிவித்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகின்றது. அனிருத்தின் இசை குறித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சென்னையில் நடந்த புரோமோசன் நிகழ்ச்சி மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சிகளிலும் பாராட்டிப் பேசினார். மேலும் அனிருத் ஒரு படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை முடித்துவிட்டால், அந்தப் படம் எப்படி உள்ளது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தேவரா படம் மிகவும் தரமான படமாகவும், ஆக்ஷன் நிறைந்த படமாகவும் இருக்கும் என்பதைக் குறிப்பிடும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முதல் நாள் வசூல்: படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 172 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வசூல் என்பது முதல் நாள் கோட் படத்தின் வசூலை விட கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகள் அதிகம். அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன கல்கி 2898 ஏடி படத்தின் முதல் நாள் வசூலை ஒப்பிடும்போது, தேவரா படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடிகள் குறைவு. ஆனாலும் ஜூனியர் என்.டி. ஆர் சிங்கிள் ஹீரோவாக நடித்து அதிக வசூலை முதல் நாளில் ஈட்டிய படங்களின் வரிசையில் இந்தப் படம் இடம் பெற்றுள்ளது.

மொத்த வசூல்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் படம் முதல் நாளை விட இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது என்பது தெளிவாகின்றது. அதாவது, இரண்டாவது நாளில் படத்தின் வசூல் என்பது, சுமார் 60 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனாலும் இந்த வசூல் கணக்கு என்பது இந்தியாவில்தான். வெளிநாடுகளில் படத்தின் வசூலைக் கணக்கிட்டால், இன்னும் அதிகரிக்கும், அதாவது படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் ரூபாய் 100 கோடிகளைத் தொடும் என கூறப்படுகின்றது. மொத்தத்தில் தேவரா படம் இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











