Devara: வைலன்ஸ் வார்னிங் இதுதானா? ரத்த அபிஷேகம்.. தேவாரா படத்தை கிடாய் வெட்டி வரவேற்ற ரசிகர்கள்!

ஹைதராபாத்: சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவாரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாரானது. இதன் முதல் பாகம் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.

படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ஆந்திராவில் உள்ள தியேட்டரில் படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற ரசிகர்கள் கிடாய் வெட்டி வரவேற்றுள்ளனர்.

jr ntr devara jahnvi kapoor

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஜான்வி கபூர் தனது முதல் படத்திலேயே பாரபட்சமின்றி கிளாமர் விருந்து வைத்துள்ளது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறும் அளவிற்கு பாடல்களில் செம கிளாமராக நடித்துள்ளார். குறிப்பாக பத்தவைக்கும் பாடலின் லிரிக் வீடியோவில் இடையிடையே வரும் பாடலின் ஒரிஜினல் வீடியோவில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ரொமான்ஸ் செய்கின்றேன் என, அந்த பாடலை கிளாமர் பாடலாக மாற்றியுள்ளனர் என்றே கூறும் அளவிற்கு கிளாமராக நடித்துள்ளனர்.

படம் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் சிறப்புக் காட்சிகள் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்கள் முழுவதும் திரையிடப்பட்டது. படத்தினைக் காண முதல் நாள் இரவில் இருந்தே ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். மேலும் தியேட்டர் முழுவதும் ஃப்ளக்ஸ் வைப்பது, வண்ணக் காகிதங்கள் ஒட்டுவது, ஜூனியர் என்.டி.ஆர்.இன் படங்களுக்கு மாலை அணிவிப்பது என தியேட்டரையே திருவிழாவாக மாற்றிவிட்டனர்.

இரண்டு பாகம்: தேவாரா படம் முதலில் முதல் பாகமாகத்தான் எடுக்கத் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் படத்தின் நீளத்தினைக் கருத்தில் கொண்டு இரண்டு பாகங்களாக பிரித்ததாகவும் படக்குழு ஏற்கனவே தெரிவித்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகின்றது. அனிருத்தின் இசை குறித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சென்னையில் நடந்த புரோமோசன் நிகழ்ச்சி மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சிகளிலும் பாராட்டிப் பேசினார். மேலும் அனிருத் ஒரு படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை முடித்துவிட்டால், அந்தப் படம் எப்படி உள்ளது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தேவாரா படம் மிகவும் தரமான படமாகவும், ஆக்‌ஷன் நிறைந்த படமாகவும் இருக்கும் என்பதைக் குறிப்பிடும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

jr ntr devara jahnvi kapoor

கிடாய் வெட்டு: இந்நிலையில் படம் பார்க்க வந்த ரசிகர்கள், ஒரு கிடாயை வாங்கியுள்ளனர். படம் திரையிடுவதற்கு முன், ரசிகர்கள் திரையரங்கிற்குச் செல்லும்போது, தாங்கள் வாங்கிய கிடாயை வெட்டி, அதன் ரத்தத்தை தேவாரா படத்தின் போஸ்டரில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் மீது தெளித்து ரத்த அபிசேகம் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ரசிகர்கள் படம் வெற்றி பெற ரத்த அபிஷேகம் செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

jr ntr devara jahnvi kapoor

ஆச்சரியம்: பொதுவாக ரசிகர்கள் படம் வெற்றி பெற, பாலபிஷேகம் செய்வார்கள், தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ரசிகர்கள், பாதயாத்திரை செல்வார்கள், மொட்டை அடிப்பார்கள், அலகு குத்துவார்கள். ஆனால் தேவாரா படத்திற்காக ஆந்திரா ரசிகர்கள் கிடாய் வெட்டியுள்ளது என்பது பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X