Devara Trailer: அப்பா புலி.. மகன் பூனை.. ஜூனியர் என்டிஆர் தேவரா டிரெய்லர் எப்படி இருக்கு?

ஹைதராபாத்: கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. அந்த படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய கொரட்டல சிவா கடைசியாக சிரஞ்சீவி மற்றும் ராம் சரணை வைத்து இயக்கிய ஆச்சார்யா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

devara jr ntr janhvi kapoor

அந்த தோல்வியில் இருந்து ஜூனியர் என்டிஆரின் தேவரா படம் அவரை மீட்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேவரா படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், அந்த டிரெய்லர் எப்படி இருக்கு என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

தேவரா டிரெய்லர்: கொரட்டலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள தேவரா படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் ஜூனியர் என்டிஆர் எந்தவொரு டீ ஏஜிங்கும் செய்யாமல் ஃபிளாஷ்பேக் போர்ஷனை பயன்படுத்தி நடித்துள்ளார். வில்லனாக சைஃப் அலி கான், ஊர் பெரியவராக பிரகாஷ் ராஜ், ஹீரோயினாக ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மீனவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை பற்றிய படமாக ரத்தமும் சதையும் கொண்ட படமாக இந்த தேவரா உருவாகியுள்ளது.

அப்பா புலி.. மகன் பூனை: தேவரா படத்தில் வீரனான அப்பா கதாபாத்திரத்திலும் கோழையான மகன் கதாபாத்திரத்திலும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுபோல பல ஆயிரம் படங்கள் வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்களை தியேட்டரில் எப்படி திருப்திப்படுத்துகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆக்‌ஷன் காட்சிகள் தான் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என தெரிகிறது. மொத்த படமும் சிஜி செட்டுக்குள் படமாக்கப்பட்டதை போன்ற உணர்வையே தேவரா டிரெய்லர் கொடுத்துள்ளது.

ஜான்வி கபூர்: பாலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு வந்த நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கிறார். ஏற்கனவே வெளியான பாடல்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத ஜான்வி கபூர் டிரெய்லரில் பெரிதாக இடம்பெறவில்லை.

6 வருஷத்துக்குப் பிறகு சோலோ படம்: ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்காக பல வருடங்களை செலவு செய்த ஜூனியர் என்டிஆர் இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் 6 வருஷத்துக்குப் பிறகு தன்னுடைய சோலோ ரிலீஸ் படம் வெளியாகப் போகிறது எனக்கூறியுள்ளார்.

தேவரா ரிலீஸ் தேதி: இந்த மாதம் செப்டம்பர் 27ம் தேதி ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. பான் இந்தியா படமாக இந்த படத்தை வெளியிடுகின்றனர். மும்பையில் ஆரம்பத்திலேயே ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்துக்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் வேட்டை நடத்தும் படமாக தேவரா மாறும் என தெரிகிறது. ஹனுமான் திரைப்படம் 300 கோடியும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் 250 கோடியும் இந்த ஆண்டு தெலுங்கில் வசூல் செய்த நிலையில், தேவரா திரைப்படம் எந்தளவுக்கு வசூல் ஈட்டும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X