கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.. பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு
ஹைதராபாத்: டோலிவுட் நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் 2022 ஆம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதன் பின்னர் படத்தின் அறிவிப்புகள் உடனே வரும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் பிரசாந்த் நீல் சலார் படத்தின் வேலைகளில் இறங்கினார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தின் இரண்டாம் பாகமும் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகமும் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில், இன்று அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி, என்.டி.ஆர் 31 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மைத்ரி மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்.டி.ஆர் 31 என்ற பெயரிலேயே இந்தப் படத்தின் அப்டேட்களை மைத்ரி மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இன்னும் இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படத்திற்கு டிராகன் என பெயர் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆர்.ஆர். ஆர் படத்தில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைச் சென்றடைந்த ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தேவாரா படத்தின் முதல் பாகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜான்வி கபூரின் ரொம்பவும் கிளாமரான நடனத்தினால் இந்த பாடல் இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக இந்த பாடலில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் என இருவரும் இணைந்து ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவிற்கு கிளாமர் நடனம் ஆடியிருந்தனர்.
ஜான்வி கபூர்: சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை செப்டம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ட்ரெண்டிங்: இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு தெலுங்கு திரையிலகில் இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியானது. இதில் தமிழில் 'பத்தவைக்கும்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 4 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த பாடல் தெலுங்கில் சுட்டமல்லே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தெலுங்கு பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 3 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்தியிலும் இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.
மகிழ்ச்சியில் ரசிகர்கள்: தேவாரா படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிசியாக இருக்கும் என்.டி.ஆர் தற்போது தனது 31வது படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதாவது படம் வெளியாக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது தெளிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











