Just In
- 8 hrs ago
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
- 9 hrs ago
கபீர் லால் முதன் முறை இயக்கும் அகோச்சரா...பார்வையற்ற பெண்ணாக இஷா!
- 9 hrs ago
கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!
- 9 hrs ago
தமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க.. வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 05.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளா இருக்குமாம்…
- News
தாய் -மகள் என்று பார்க்காமல்.. வயலில் வைத்து இளநீர் வியாபாரி செய்த கொடூரம்.. பதைபதைத்த புதுச்சேரி
- Automobiles
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா? கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாடே கொரோனா பீதியில இருக்கு... இந்த நேரத்துல சத்தம் போடாம அந்த படத்தோட டப்பிங் வேலை நடக்குதாம்ல!
சென்னை: கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும், அந்த பிரமாண்ட படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.
பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்!

கற்பனை கதை
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்பட்டது. ஆனால், இது கற்பனை கதைதான் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆலியா பட்
இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் குரலில் அட்டகாசமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராம்சரணின் அறிமுகக் காட்சி சமீபத்தில் வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட்டனர்.

ஜூனியர் என்.டி.ஆர்
தமிழ்ப் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

டப்பிங் பணி
இந்நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் பணி சத்தம் போடாமல் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரண் தேஜாவும் தங்கள் வீடுகளில் உள்ள மினி தியேட்டர்களில் இயக்குனர் ராஜமவுலியின் மேற்பார்வையில், இந்த டப்பிங் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

மதன் கார்க்கி
இதற்கிடையே, இந்த படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா கூறும்போது, படத்தின் 75 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. 25 சதவிகிதம் மட்டுமே பாக்கி இருக்கிறது. லாக்டவுன் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும் என்றார். தமிழ் பதிப்புக்கு பாடலாசிரியர் மதன்கார்க்கி, வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார்.