ஜூனியர் என்டிஆரின் அடுத்த வேட்டை.. திரிசூலம் + வேல் போஸ்டருடன் மாஸ் அப்டேட்!
சென்னை: 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'தேவரா' படங்களின் அதிரடி வெற்றிக்குப்பிறகு, குளோபல் ஸ்டாராக மிரட்டி வரும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் அடுத்த மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாஸ் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஜூனியர் என்.டி.ஆர் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் மெகா அப்டேட் தற்போது சோசியல் மீடியாவை அதிர வைத்து வருகிறது.
முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான 'அரவிந்த சமேத வீரராகவா' படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தக் கூட்டணி, மீண்டும் இணைவது இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு மாஸ் நிகழ்வாக மாறியுள்ளது. இந்த புதிய ப்ராஜெக்ட் குறித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் மாஸான போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து அறிவித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர்: அந்த போஸ்டரே ரசிகர்களுக்குப் பலத்த கூஸ்பம்ப்ஸைக் கொடுத்துள்ளது. போஸ்டரில் 'திரிசூலம்' மற்றும் 'வேல்' ஒன்றிணைவது போன்றும், அதனூடே மனித உடலின் 'DNA' வடிவமைப்பு இடம்பெறும் படியும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதோடு முக்கியமாக, "ஒரே வேல்... ஒரே நோக்கம்... ஒரே தெய்வீக தீர்ப்பு" என்ற பவர்புல்லான டேக்லைன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. புராணக் கதைகளின் தாக்கத்துடன், ஒரு தெய்வீகக் கருவை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது. வலுவான கதைக்களம், ஆழமான எமோஷன்ஸ், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் ஹாலிவுட் தரத்திலான பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் இப்படம் செதுக்கப்பட்டுள்ளது.
ராக்ஸ்டார் அனிருத்: இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு வெறித்தனமான பிளஸ் பாயிண்டாக, இந்திய சினிமாவின் நம்பர் 1 மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா' படத்திற்கு அனிருத் போட்ட பிஜிஎம் தியேட்டர்களை அதிர வைத்த நிலையில், இந்த படத்திற்கு அவரது இசை வேற லெவல் மேஜிக்கை செய்யும் என நம்பலாம். 'ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ்' சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா மற்றும் 'என்.டி.ஆர் ஆர்ட்ஸ்' சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் ஆகிய இரு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கின்றன. படத்தில் நடிக்கப்போகும் மற்ற டாப் ஸ்டார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அடுத்தடுத்த ஹாட் அப்டேட்டுகள் விரைவில் படக்குழு வெளியிடும்.


Click it and Unblock the Notifications