ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்... ஆர்ஆர்ஆர் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

ஐதராபாத் : ஜூனியர் என்டிஆரின் 38வது பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

38வது பிறந்ததினம்

38வது பிறந்ததினம்

டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆர் தனது 38வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். முன்னதாக இந்த கொரோனா காலத்தில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் வெளியில் வந்து கொண்டாட வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டார்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம்

ஆர்ஆர்ஆர் திரைப்படம்

தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருடன் ஆலியா பட், ராம் சரண் மற்றும் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின்மூலம் டோலிவுட்டில் தனது முதல் படத்தில் ஆலியா பட் அறிமுகமாகவுள்ளார்.

ஆர்ஆர்ஆர் டீம் அறிவிப்பு

ஆர்ஆர்ஆர் டீம் அறிவிப்பு

இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்ததினத்தையொட்டி இன்றைய தினம் படத்தின் முக்கிய போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. மேலும் அவரது பிறந்ததினத்தை ரசிகர்கள் வீட்டிலேயே கெண்டாடவும் அறிவுறுத்தியிருந்தது.

ராஜமௌலி வெளியீடு

இந்நிலையில் இன்றைய தினம் அவரது ஆர்ஆர்ஆர் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்னதாக 1920ல் கோமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜூ ஆகியோரின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X