அள்ளுது நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல்... தெலுங்கில் இதை எந்த ஹீரோ பாடறார் தெரியுமா?

By

சென்னை: விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலை, தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவர் பாட இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

இந்தப் படத்தின் விஜய் மற்றும் விஜய் சேதுபதி லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பின்னர் வெளியிடப்பட்ட விஜய்யின் மற்றொரு லுக்கும் வைரலானது. அதையும் ரசிகர்கள் டிரெண்டாக்கினர். இதையடுத்து இந்தப் படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நெய்வேலியில் இதன் ஷூட்டிங் நடந்தபோது நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு ஏராளமாகக் கூடிய ரசிகளுடன் நடிகர் விஜய் எடுத்த செல்பி வைரலானது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதியிருந்தார். ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருந்த இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார்.

சாதனை படைத்தது

சாதனை படைத்தது

இந்தப் பாடல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டதால், இதனால் இந்தப் பாடல் டிரெண்ட் ஆனது. பாடல் வெளியான 16 மணி நேரத்திலேயே 6 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. வரும் 28 ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 9 ல் ரிலீஸ்

ஏப்ரல் 9 ல் ரிலீஸ்

மாளவிகா மோகனன் நடிக்கும் காட்சிகளை இன்னும் 2 நாட்கள் படமாக்க உள்ளனர். அதோடு படம் முடிகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு இறங்கியுள்ளது. இதற்கிடையே இந்த படம் தெலுங்கிலும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

அங்கு இந்தப் படத்தை மகேஷ் எஸ்.கொனேரு வெளியிடுகிறார். தமிழில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி ஹிட்டானதால், அங்கும் பெரிய ஹீரோ ஒருவரை பாட வைத்து அந்தப் பாடலை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ, ஜூனியர் என்டிஆரை பாட வைக்க முடிவு செய்துள்ளனர். இப்போது ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்துவருகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X