ஆக்ரோஷமாக காத்திருக்கும் ஜூனியர் என்டிஆர்... டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை : ஜூனியர் என்டிரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர்.

இப்படத்தில் கொம்ன் பீமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

JR NTR upcoming film title and poster released

மாஸ் நடிகர்கள் : ஆர்ஆர்ஆர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு அதில் நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே உலக அளவில் தெரிந்த நடிகர்களாகி விட்டார்கள். தெலுங்கு திரை உலகில் முன்பைவிட இருவருமே மாஸ் காட்டி வருகிறார்கள்.

கொரட்டலா சிவா : இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆச்சார்யா படத்தை இயக்கிய கொரட்டலா சிவாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

JR NTR upcoming film title and poster released

பிறந்த நாளைமுன்னிட்டு : இப்படத்தின் பூஜையுடன் கடந்த ஏப்ரல் மாதம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் 41வது பிறந்த நாளை கொண்டாட பட உள்ளதை முன்னிணட்டு படத்தின் தலைப்புடன் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு தேவரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட : படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கடலுக்கு நடுவே பாறையில், ரத்தம் சொட்ட சொட்ட கத்தியை கையில் ஏந்தியபடி ஆக்ரோஷமாக காணப்படுகிறார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

More from Filmibeat

Read more about: jr ntr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X