நடுரோட்டில் ஜூனியர் என்டிஆரின் காரை தடுத்து நிறுத்தி சோதனை.. பதறிய நடிகரின் மகன்.. எதற்கு தெரியுமா?

ஹைதராபாத் : நடுரோட்டில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆரின் காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்து அபராதம் விதித்துள்ளனர்.

ஹைதராபாத் போலீசார் தற்போது டின்ட் பிலிம்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி டின்ட் பிலிம்மை அகற்றிவிட்டு அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், நம்பர் பிளேட்டு சரி இல்லாமல் வரும் வாகனங்களையும் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

வாகனத்தில் உள்ளே இருக்கும் நபர் சிசிடிவி கேமராக்களில் தெரியாததால் போக்குவரத்து போலீசார் சிரமப்படுகின்றனர். இதனால், ஜன்னலில் டின்ட் ஒட்டுவதை போலீசார் அனுமதிப்பதில்லை. அதனால், விபத்து, திருட்டு போன்ற சம்பவங்களில் ஓட்டுநரை அடையாளம் காண முடியவில்லை என கூறப்படுகிறது.

jr ntr vehicle stopped by traffic cops in Hyderabad for having tinted windows

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா போன்ற சில கார்கள் தொழிற்சாலையில் இருந்து UV கட் கண்ணாடியுடன் வருகின்றன. இந்த கண்ணாடிகள் டாப் எண்ட் வகைகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையின் டார்க் பச்சை நிறத்தை பயன்படுத்துகின்றனர். இத்தகைய கண்ணாடிகள் RTO ஆல் அங்கீகரிக்கப்படுகின்றன. ஏன்என்றால், இவை பார்வை எந்த இடையூறும் செய்யாது மேலும் வெயிலும் காருக்குள் வராமல் இருக்கும்.

இந்நிலையில், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு பிலிம் ஸ்டிக்கர் அகற்றினார். அந்த கார் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்துள்ளது.

jr ntr vehicle stopped by traffic cops in Hyderabad for having tinted windows

ஆனால், அந்த காரில் ஜூனியர் என்.டி.ஆர். இல்லை. அவர் மகன் மற்றும் சிலர் மட்டுமே அந்த காரில் இருந்துள்ளனர். போலீசார் திடீரென சோதனை செய்தால் ஜூனியர் என்.டி.ஆரின் மகன் பதறிப்போனதாக கூறப்படுகிறது. பின்னர் விதிகளை மீறி கருப்பு நிற டின்ட் ஒட்டியதற்கு அபராதம் விதித்து காரை அனுப்பி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X