GOAT vs Devara Box Office: கோட் லைஃப் டைம் வசூலை முந்திய தேவரா.. பிரபாஸ் பக்கத்துல கூட போக முடியாது!
சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியானது. அதிகாரப்பூர்வமாக அந்தத் திரைப்படம் 413 கோடி ரூபாய் வசூலைக் கடந்த அறிவிப்பை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அதன் பின்னர் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
கோட் திரைப்படம் அதிகபட்சமாக 440 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 500 கோடி ரூபாய் வசூலை விஜய் நடித்த கோட் திரைப்படம் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் கோட் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோலிவுட் தான் டாப்: இந்த ஆண்டு இந்திய சினிமாவில் வெளியான படங்களில் இதுவரை டோலிவுட்டில் வெளியான நடித்த கல்கி 2898 திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டியுள்ளது. அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் விஜய்யின் கோட் திரைப்படம் இருந்து வந்த நிலையில் அந்த படத்தின் வசூலை தற்போது தேவரா திரைப்படம் முந்தி உள்ளது.

கோட் லைஃப் டைம்: விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்த கோட் திரைப்படம் 440 கோடி ரூபாய் வசூலை லைஃப் டைமில் அள்ளியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் கோட் படத்தின் வசூலை இந்த ஆண்டு வேட்டையன் மற்றும் கங்குவா முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கோட் வசூலை முந்திய தேவரா: ஆனால், தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் தேவரா திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையிலேயே கோட் படத்தின் வசூலை அசால்ட்டாக முறியடித்து விட்டது. பிரபாஸின் கல்கி படத்தின் வசூலை தேவரா படம் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 466 கோடி வசூலை 10 நாட்களில் உலகளவில் தேவரா படம் அள்ளியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 500 கோடி கிளப்பில் சீக்கிரம் தேவரா இணையும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











