»   »  சிங்கம் -7ம் பாகத்திற்கு இப்போதே தயாராகும் ‘குட்டி’ துரை சிங்கம்!

சிங்கம் -7ம் பாகத்திற்கு இப்போதே தயாராகும் ‘குட்டி’ துரை சிங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவின் மகனான தேவ், கையில் துப்பாக்கியுடன் போலீஸ் தொப்பி அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று ‘குட்டி சிங்கம்' என்ற பெயரில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா -ஜோதிகா நட்சத்திர ஜோடியின் இளைய மகன் தேவ். ஊடக வெளிச்சம் படாமல் வளர்த்து வந்த தன் குழந்தைகளை சமீபகாலமாக பொது விழாக்களுக்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர் சூர்யாவும், ஜோதிகாவும்.

இதனால், பொதுவாக பிரபலங்களின் குழந்தைகளுக்கு இருக்கும் விளம்பரம் இவர்களுக்கும் கிடைத்துள்ளது.

Kutty Singam #DevSuriya #S3

Posted by SURYA FANS CLUB on Monday, January 25, 2016

இந்நிலையில், கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, போலீஸ் தொப்பி அணிந்த தேவ்-ன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது தனது வெற்றிப் படங்களான சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமான எஸ்.3-யில் நடித்து வருகிறார் சூர்யா. இதனால் தேவ்-ன் இந்தப் புகைப்படத்தை குட்டி சிங்கம் என சூர்யா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனது தந்தையின் பழைய வெற்றிப் படங்களை தற்போதுள்ள வாரிசு நடிகர்கள் தற்போது தூசு தட்டி இரண்டாம் பாகமாக தயாரித்து வருகின்றனர். அந்தவகையில் யார் கண்டது எதிர்காலத்தில் சிங்கம் படத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் தேவ் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

English summary
From time to time we get to see pictures of star kids in adorable poses, here is one such which features Dev, son of Suriya.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil