வா டீல்..அண்டாவ காணோம்..மம்மி சேவ் மீ.. 3 படங்களும் OTTல் ரிலீஸ்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சென்னை : கொரோனா பாதிப்பால் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக OTT ல் வெளியாகி வருகின்றன. தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அருண்விஜயின் படம் உள்பட 3 படங்கள் OTT ல் வெளியாக உள்ளன.

சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் OTTல் முதன் முறையாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் என்ற படமும் OTT ல் வெளியாக உள்ளது.

மூன்று படங்கள் ஓடிடியில்

மூன்று படங்கள் ஓடிடியில்

பொன்மகள் வந்தாள், பெண்குயினை தொடர்ந்து தமிழில் அடுத்து எந்தந்த படங்களெல்லாம் OTT ல் வெளியிடப்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது மாஸாக ஒரு அப்டேட் வந்துள்ளது. ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள மூன்று படங்களை இந்த வருடம் OTT ல் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அசரவைக்கும் சண்டை

அசரவைக்கும் சண்டை

மாஸ் அண்ட் ஸ்டைலிஷ் கதாநாயகனாக வலம் வரும் அருண் விஜய் மற்றும் கார்த்திகா நாயர் இணைந்து நடித்துள்ள இந்த படம் ரத்தின சிவா இயக்கி இருக்கிறார். மேலும் இதன் பாடல்கள் மற்றும் அசரவைக்கும் சண்டை காட்சிகளுடன் விருவிருப்பான டிரெய்லர் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்படும் என்று நினைத்து வந்த நிலையில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் சில பல காரணங்களால் வெளியாக வில்லை. எனவே இதனை அடுத்து பல வருடங்களாக கிடப்பில் போட்டுள்ள வா டீல் படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு OTT ல் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

விஜய்சேதுபதி குரல்

விஜய்சேதுபதி குரல்

அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கத்தில் அண்டாவ காணோம் திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு தயாராகி இருந்தது. இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி லீட் ரோலிலும், மற்றும் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த முனிஸ்காந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படம் அண்டாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இதில் அந்த அண்டா பேசுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த பேசும் அண்டாவிற்கு பின்னணி குரல் நடிகர் விஜய்சேதுபதி கொடுத்துள்ளார். எளிதான கதைக்களத்துடன் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக தயாராக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அதன் வெளியீட்டு தேதியும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெகு வருடங்களாக காத்திருப்பை ஏற்படுத்திய இந்த படம் இந்த ஆண்டு OTT ல் வெளியாக உள்ளது.

பயமுறுத்தும் இருட்டு

பயமுறுத்தும் இருட்டு

கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘மம்மி சேவ் மீ‘ படம் தற்போது தமிழிலும் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. விறுவிறுப்பான காட்சிகள் பயமுறுத்தும் இருட்டு தாய்ப்பாசம் தனி பங்களா என ஹாரர் படத்திற்கு உரித்தான அத்தனை அம்சமும் பெற்றுள்ள இந்த படம் தமிழில் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வெளியிடுகிறது. இவ்வாறு இந்த மூன்று படங்களும் OTT ல் வெளியிடப்படும் என அதன் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக சொல்லி வந்த நிலையில் இதன் வெளியீட்டு தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.

More from Filmibeat

Read more about: release ott ரிலீஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X