விநியோகஸ்தராக வந்து தயாரிப்பாளராகக் கலக்கும் ஜேஎஸ்கே!
ஜேஎஸ்கே... ஒரு ரியல் எஸ்டேட்காரராகத்தான் இவரை திரையுலகுக்குத் தெரிய வந்தது, ஆரோகணம் படம் வெளியாகும் வரை.
ஆனால் ஆரோகணத்துக்குப் பிறகு, அந்தத் தலைப்பைப் போலவே ஜேஎஸ்கேயின் சினிமா வாழ்க்கையிலும் கிடுகிடு முன்னேற்றங்கள்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்த அவர், இன்று தமிழின் முன்னணித் தயாரிப்பாளர். ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார்.

மூன்று படங்கள்
‘சிவப்பு எனக்கு பிடிக்கும்', ‘ஆள்', ‘மெகா' என்ற மூன்று படங்களை இப்போது அவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் வெளியிடுகிறது.

சிவப்பு எனக்குப் பிடிக்கும்
சாண்ட்ரா எம் கதாநாயகியாக நடிக்கும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தை யுரேகா இயக்கியிருக்கிறார். இவர் ‘மதுரை சம்பவம்' படத்தை இயக்கியவர். இப்படம் பாலியல் வன்முறைகள் பற்றிய படமாக தயாராகியுள்ளது.

ஆள்
‘மைனா' விதார்த்து ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் ‘ஆள்' படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். விதார்த்துக்கு ஜோடியாக ஹர்திகா ஷெட்டி நடித்துள்ளார். ஜோஹன் இசையமைத்திருக்கிறார்.

மேகா
சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த காதல் படம் இந்த மேகா. கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும் ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த மூன்று படங்களையும் ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications











