ஜூபிளியில் சிக்ஸர்.. அட்லீ படத்தை எட்டிப் பிடித்த வாமிகா காபி.. அந்த ரோலில் நடிக்கிறாரா?

மும்பை: ஜூபிளி வெப்சீரிஸ், மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை மூலம் இந்த ஆண்டு ரசிகர்களை அதிகம் கிறங்கடித்த நடிகை வாமிகா காபி ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அட்லீயின் படத்திலும் கர்ச்சிப்பை போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை வாமிகா காபி தனது குண்டு பல்பு கண்களால் இளைஞர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிகமாகவே வசீகரித்து வருகிறார்.

Jubilee and Ninaivo Oru Paravai star Wamiqa Gabbi grabs Atlee movie

சமீப காலமாக ஓடிடியில் தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வரும் வாமிகா காபி அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதியின் தெறி: ராஜா ராணி படத்தை முடித்த கையோடு நண்பன் படத்தில் வேலை செய்யும் போதே விஜய்க்கு சொல்லி வைத்த தெறி கதையை படமாக இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் இயக்குநர் அட்லீ.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராதிகா சரத்குமார், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த தெறி படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அப்போதே அந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமமும் விற்பனையானது.

Jubilee and Ninaivo Oru Paravai star Wamiqa Gabbi grabs Atlee movie

வருண் தவான், கீர்த்தி சுரேஷ்: ஜவான் படத்தை முடித்து விட்டு இயக்குநர் அட்லீயே இந்தியில் இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உதவி இயக்குநரான காலீஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், இன்னொரு ஹீரோயின் கதாபாத்திரத்தில் வாமிகா காபி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூபிளி, நினைவோ ஒரு பறவையில் அசத்தல்: 2007ல் வெளியான ஜப் வி மெட் படத்திலேயே கரினா கபூரின் தங்கையாக நடித்து இந்தி திரையுலகில் அறிமுகமானவர் வாமிகா காபி. இந்த ஆண்டு வெளியான ஜூபிளி வெப்சீரிஸில் நிலோஃபர் குரோஷி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ஓடிடி ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.

Jubilee and Ninaivo Oru Paravai star Wamiqa Gabbi grabs Atlee movie

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் வெளியான நினைவோ ஒரு பறவை கதையிலும் நடித்து கோலிவுட் ரசிகர்களையும் கொள்ளையடித்த வாமிகா காபிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

எமி ஜாக்சன் ரோலா: தெறி இந்தி ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ் மருத்துவராக சமந்தா நடித்த ஃபிளாஷ் பேக் ரோலிலும் வாமிகா காபி எமி ஜாக்சன் நடித்த டீச்சர் ரோலிலும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் ஹீரோயினாக இணைந்துள்ள வாமிகா காபிக்கு இந்தி படங்களிலும் அதிக வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X