twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராகிணி, சஞ்சனாவை விடுதலை செய்யாவிட்டால் குண்டு வைத்து தகர்ப்போம்.. நீதிபதிக்கு திடீர் மிரட்டல்!

    By
    |

    பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைகளை விடுதலை செய்யக்கோரி, நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னட சினிமா துறையினருக்கு இதில் தொடர்பு இருந்ததை அடுத்து அவர்களிடம் விசாரித்தனர்.

    படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. நட்சத்திர ஓட்டலில் தனிமை!படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. நட்சத்திர ஓட்டலில் தனிமை!

    சிறையில் நடிகைகள்

    சிறையில் நடிகைகள்

    இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    சஞ்சனா, ராகிணி

    சஞ்சனா, ராகிணி

    இதில் அரசியல் தொடர்புடைய அரசியல் தொடர்புடையவர்கள் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில், தங்களை ஜாமினில் விடுதலை செய்யக் கோரி, நடிகைகள் சஞ்சனா கல்ராணியும் ராகிணி திவேதியும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிபதிக்கு பார்சல்

    நீதிபதிக்கு பார்சல்

    அவர்கள் மனுக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எம்.சீனப்பா வீட்டிற்கு நேற்று ஒரு பார்சல் வந்தது. அதில், 3 பேப்பர்கள் இருந்தன. அதில், போதை பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.

    வெடிகுண்டு மிரட்டல்

    வெடிகுண்டு மிரட்டல்

    ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பெங்களூரு காவல்பைரசந்திராவில் நடந்த கலவரத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறியிருந்தனர். கடிதத்துடன் வெடிகுண்டுக்கு பயன்படுத்தும் டெடனேட்டர் ஒயரும் வைத்திருந்தனர்.

    போலீஸ் கமிஷனர்

    போலீஸ் கமிஷனர்

    அதே கடிதத்தில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மற்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதம் கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, தனது உதவியாளர் மூலம், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    Recommended Video

    போதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு
    பெங்களூரில் பரபரப்பு

    பெங்களூரில் பரபரப்பு

    போலீசார் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை நடத்தினர். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இந்த மிரட்டல் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிபதிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விட்டுள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Panic gripped after a blast threat was made on Monday if those arrested in the drug peddling case were not released immediately. The threat was made through a letter written by an unknown person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X