விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் கெத்து காட்டிய பிரபல நடிகை.. எச்சரித்து அனுப்பிய நீதிபதி

அபி சரவணனுடனான விவாகரத்து வழக்கில் கவுன்சிலிங்கிற்கு மறுத்த நடிகை அதிதி மேனனை நீதிபதி எச்சரித்துள்ளார்.

Recommended Video

பிரபல நடிகர் அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு வந்த தகவல்- வீடியோ

சென்னை: விவாகரத்து வழக்கில் கவுன்சிலிங்கிற்கு மறுத்த நடிகை அதிதி மேனனை நீதிபதி எச்சரித்துள்ளார்.

பட்டதாரி என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்தனர் அப்பட நாயகன், நாயகியான அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் பற்றிய தகவல் வெளியானால் தங்களது திரையுலக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், அதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Judge warns actress Aditi menon in divorce case

சென்னையில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ள அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு சென்றுவிட்டதாகவும் அபி சரவணன் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு விளக்கம் அளித்த அதிதி மேனன், 'நான் அவரை காதலித்தேனே தவிர, திருமணம் செய்யவில்லை' எனக் கூறினார்.

இதனால் தங்களுக்கு திருமணம் ஆனதற்கான ஆதாரங்களை அபி சரவணன் வெளியிட்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதுவரை திருமணம் ஆகவில்லை எனக் கூறி வந்த அதிதி மேனன், இதனால் விவாகரத்து கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

Judge warns actress Aditi menon in divorce case

அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், மனைவியுடன் சமரசம் செய்து தங்களை சேர்த்து வைத்து புதிதாக வாழ்க்கையை தொடங்க நீதிமன்றத்தை நாடியுள்ளார் அபி சரவணன். இந்த வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் தட்டிக் கழித்துள்ளார் அதிதி மேனன்.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிதியும் ஆஜரானார். அவரிடம் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிதி, 'இந்த வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

அதிதியின் இந்த பேச்சால் கோபமடைந்த நீதிபதி, 'இது எங்களது கடமை. குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங்கிற்கு பரிந்துரை செய்யும். கண்டிப்பாக சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும்' என எச்சரித்து அனுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X