»   »  மும்பை பீச்சுக்கு வந்து குத்தாட்டம் போட்ட ஹாலிவுட் நடிகை!

மும்பை பீச்சுக்கு வந்து குத்தாட்டம் போட்ட ஹாலிவுட் நடிகை!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹாலிவுட்டில் இப்பத்தான் காலடி எடுத்து வைத்து சற்றே அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்திருப்பவர் ஜூடி ஷெகோனி. ஈஸ்ட்என்ட்ர்ஸ் படம் மூலம் பெயர் வாங்கினார். இப்போது திடீரென பாலிவுட்டுக்கு வந்து விட்டார்.

கவர்ச்சிக்குப் பெயர் போனவர் ஜூடி. மதமதப்பான அவரது கவர்ச்சிக்கு ஹாலிவுட்டில் ரசிகர்கள் திரள ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில் தனது கவர்ச்சிப் பங்களிப்பை இந்தியாவுக்கும் அளிக்கவந்துள்ளார் ஜூடி.

கிளப் டான்ஸர் என்ற இந்திப் படத்தில் தலை உடல் காட்டுகிறார் ஜூடி. இதற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்தது. அதில் படு கவர்ச்சிகரமாக ஆடிய ஜூடியைப் பார்த்து பீச்சுக்கே வியர்த்துப் போயிருக்கும்.

லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து மும்பைக்கு

லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து மும்பைக்கு

லாஸ் ஏஞ்செலஸின் கடுமையான வெயிலிலிருந்து தப்பி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார் ஜூடி. மும்பை கிளைமேட் அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.

தங்கநிற பிகினியில் அங்கம் பளிச்சிட...

தங்கநிற பிகினியில் அங்கம் பளிச்சிட...

தங்க நிற பிகினியில் அங்கம் பளிச்சிட, படு கவர்ச்சிகரமான தோற்றத்துடன் மும்பை பீச்சில் அவர் ஆடிய ஆட்டத்தை கேமராக்கள் சுட்டுத் தள்ளின. அவருடன் சேர்ந்து ஏராளமான டான்ஸர்களும் ஆடினர்.

வயசு 30 ...

வயசு 30 ...

ஜூடிக்கு வயது 30 ஆகி விட்டது. ஆனாலும் வயதை சற்றும் ஞாபகப்படுத்தாத அளவுக்கு அவரது கவர்ச்சி கிறங்கடிக்கிறது. இந்தித் திரையுலகம் குறித்துக்கேள்விப்பட்டு, ஆச்சரியப்பட்டு கிளப் டான்ஸர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஜூடி.

டான்ஸில் பிரமாதம்..

டான்ஸில் பிரமாதம்..

கவர்ச்சியில் மட்டுமல்லாமல் டான்ஸிலும் பிரமாதப்படுத்துகிறாராம் ஜூடி. மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே பிடித்துக் கொண்டு பின்னி எடுத்து விடுகிறாராம்.

காது அடைத்து, மூக்கடைத்து...

காது அடைத்து, மூக்கடைத்து...

மும்பை கிளைமேட் அவருக்குப் பிடித்திருந்தாலும் அவரது உடலுக்குப் பிடிக்காமல் போய் விட்டதாம். சளி பிடித்துக் கொண்டு கஷ்டமாகி விட்டதாம். மேலும் மூக்கு அடைத்துக் கொண்டு விட்டதாம், காது இரண்டும் அடைத்து 'கொய்ய்ய்ய்' என்று சத்தம் வருகிறதாம். காது எப்ப சரியாகுமோ என்று கவலையுடன் ட்வீட் செய்துள்ளார் ஜூடி.

உடம்பைப் பார்த்துக்குங்க மேடம்...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    She first made her name during a stint on EastEnders, but actress Judi Shekoni was a long way from Walford on Thursday. The star, who has just started to make her name in Hollywood, swapped the LA sunshine for the beaches of Mumbai as she shot scenes for her new Bollywood film, Club Dancer.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more