மும்பை ஏர்போர்ட்டில்.. பிரபல நடிகையின் வைரத்தோடு மாயம்.. உதவி கேட்கும் ஹீரோயின்!
மும்பை: பிரபல நடிகையின் வைரத்தோடு மும்பை விமான நிலையத்தில் மாயமாகி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், ரவிச்சந்திரன் ஜோடியாக பருவராகம், நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்திருக்கிறார்.

சர்மாஜி நம்கின்
ஷாருக் கானுடன் சேர்ந்து சில படங்களை தயாரித்துள்ள ஜூஹி, சர்மாஜி நம்கின் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இவர், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வைரக் கம்மலை தொலைத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

தயவுசெய்து உதவுங்கள்
அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தயவு செய்து உதவுங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, அதன் ஜோடியான மற்றொரு வைரக் கம்மலின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தவறி விழுந்துவிட்டது
அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை சர்வதேச விமான நிலையத்தின் எமிரேட்ஸ் கவுன்டரில் செக் செய்துவிட்டு, பாதுகாப்பு சோதனை செய்தேன். அங்கு எங்கோ எனது வைரத்தோடு தவறி கீழே விழுந்துவிட்டது. அதை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

15 வருடமாக
கிடைத்தால், அங்குள்ள போலீஸ் அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உங்களுக்கு சன்மானம் கொடுப்பேன். புகைப்படத்தில் இருப்பது அதன் மற்றொரு தோடு. கடந்த 15 வருடமாக தினமும் இதை என் காதில் அணிந்திருக்கிறேன். தயவு செய்து கண்டுபிடித்து உதவுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











