கேட்டது கிடைத்துவிட்டது, கடவுளுக்கு நன்றி: துள்ளிக் குதிக்கும் ஜூலி
Recommended Video

சென்னை: மாஸ்டர் ககனுக்கு நல்லபடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக ஜூலி தெரிவித்துள்ளார்.
கல்லீரல் பாதிப்பால் அவதிப்படும் ஒரு வயது குழந்தை ககனுக்கு உதவி செய்யுமாறு கோரி பிக் பாஸ் புகழ் ஜூலி வீடியோ ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவை காயத்ரி ரகுராமும் ஷேர் செய்திருந்தார்.

கல்லீரல்
தயாள குணமுள்ளவர்கள் செய்த உதவியால் குழந்தை ககனுக்கு நல்லபடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை கல்லீரல் தானம் செய்துள்ளார்.
மகிழ்ச்சி
பிரார்த்தனைகள் நிறைவேறியது.. கடவுளுக்கு நன்றி...அறுவை சிகிச்சை முடிந்து ஜசியுவில் வைக்கப்பட்டுள்ளார் ககன். குழந்தை மற்றும் அவருக்கு கல்லீரல் தானம் செய்த தந்தை ஆகிய இருவரும் நலம். ககனுக்காக உதவி செய்தவர்கள், பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி.

ரசிகர்கள்
ஜூலியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குழந்தைக்காக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் வாழ்த்தியுள்ளனர்.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது போலியாக நடித்தாலும் தற்போது ஒரு உயிரை காப்பாற்ற கருவியாக இருந்து நல்ல விஷயம் செய்துள்ளீர்கள் என்று பலரும் ஜூலியை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











