»   »  ஜூலியின் 'அந்த' வீடியோவை வெளியிட்ட புண்ணியவானை வாழ்த்தும் பிக் பாஸ்

ஜூலியின் 'அந்த' வீடியோவை வெளியிட்ட புண்ணியவானை வாழ்த்தும் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லடித்த நேரத்தில் ஜூலியின் வீடியோ ஒன்றை யாரோ வெளியிட்டதால் சூடுபிடித்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை டுபாக்கூர் நிகழ்ச்சி என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். யார் திட்டினாலும் அதை கண்டுகொள்ளாதது மாதிரியே நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

பலர் நிகழ்ச்சியை பார்ப்பதே கலாய்க்கத் தான்.

ஜூலி

பிக் பாஸ் டல்லடித்த நேரத்தில் ஜூலியின் உண்மையான முகம் என்று கூறி அவர் நடித்த பாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பாடா

அப்பாடா

அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஜூலியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். தற்போது பிக் பாஸை திட்டுவதை லைட்டா குறைத்துக் கொண்டு ஜூலியை விமர்சிக்கிறார்கள்.

இதுவும் ஓகே

இதுவும் ஓகே

ஜூலியை விமர்சிப்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிளஸ் என்று நினைக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். திட்டினால் என்ன, துப்பினால் என்ன நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்பது போல் உள்ளனர்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சமூக வலைதளங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அதில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவரை நிகழ்ச்சியில் டார்கெட் செய்கிறார்கள் இல்லை அழவிடுகிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் தன்னை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கும் சொல்வது போல உள்ளது.

English summary
Big Boss organisers might be happy after somebody released a video of Juliana on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil