twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஜூலி 2' படம் எந்த நடிகையின் சொந்த கதை என்று தெரியுமா?: க்ளூ இருக்கு கண்டுபிடிங்க

    By Siva
    |

    மும்பை: ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள ஜூலி 2 படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாம்.

    ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள படம் ஜூலி 2. படத்திலும் ராய் லட்சுமி நடிகையாகவே நடித்துள்ளார். இந்த படத்தை சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானி தயாரித்துள்ளார்.

    வரும் 24ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தை ராய் லட்சுமி பெரிதும் எதிர்பார்க்கிறார்.

    கதை

    கதை

    ஜூலி 2 1990கள் மற்றும் 2000 ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெயர்

    பெயர்

    ஜூலி 2 எந்த நடிகையின் கதை என்பதை தயாரிப்பாளர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பெயரை பளிச்சென்று கூறினால் சட்டப் பிரச்சனை வரும் என்று அஞ்சுகிறார்கள்.

    தெலுங்கு

    தெலுங்கு

    பாலிவுட்டில் பிரபலமாக உள்ள கான் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருடன் நடித்து தனது திரையுலக பயணத்தை அந்த நடிகை துவங்கியுள்ளார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடி கெட்டிப் பறந்துள்ளார். அந்த நடிகையின் கதை தான் ஜூலி 2 படமாம்.

    நடிகர்

    நடிகர்

    திருமணமான தமிழ்-தெலுங்கு நடிகர் ஒருவருடன் நடிகை தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து தென்னிந்திய திரையுலகில் இருந்து விரட்டப்பட்ட அந்த நடிகை போஜ்பூரி படங்களில் நடித்து அங்கு பெரிய ஆளானார். அந்த நடிகையின் கதையை படமாக்கியுள்ளனர்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    படம் ரிலீஸானதும் அந்த நடிகை யார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். ஜூலி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகருக்கும், அந்த நடிகைக்கும் தொடர்பு இருந்தது என்று நிஹலானி தெரிவித்துள்ளார்.

    English summary
    The story of the protagonist in Julie 2 is based on the life of a well-known glamorous actress of the 1990s and 2000s. The film's makers are withholding the actress' name to avoid legal trouble for the film, says its presenter Pahlaj Nihalani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X