ஜூலி 2 படம் என் கதையா?: அப்படியே ஷாக் ஆன நக்மா

By Siva

சென்னை: ஜூலி படம் தன்னுடைய கதை என்பது குறித்து அறிந்து நடிகை நக்மா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் நடிகை நக்மாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் நக்மாவின் பெயரை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் பேசியது நக்மாவை பற்றி தான் என்று பலரும் கூறுகிறார்கள்.

இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நக்மாவிடம் கேட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஓ, அப்படியா? ஜூலி 2 படம் என் கதை என்று நீங்கள் சொல்லித் தான் எனக்கே தெரியும். பத்மாவதி படத்திற்கு தான் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதனால் ஜூலி 2 படத்திற்கும் கொஞ்சம் கிடைக்கட்டும் என்று கூறியிருப்பார்கள்.

ரிலீஸ்

ரிலீஸ்

தற்போது ஜூலி 2 குறித்து நான் எதுவும் கூற முடியாது. படம் ரிலீஸாகாததால் அது பற்றி நான் பேசுவது நியாயம் இல்லை. வழக்கமாக நான் படம் பார்ப்பேன். ஆனால் ஜூலி படத்தை நிச்சம் பார்ப்பேன். படம் பார்த்த பிறகு பேசுகிறேன் என்று நக்மா தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை

ஒற்றுமை

என் கதாபாத்திரத்திற்கும், நடிகை ஒருவருக்கும் இடையே ஒற்றுமை உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. நிச்சயம் ஒற்றுமைகள் உள்ளன. இது தானா நடந்ததா இல்லை வேண்டும் என்று செய்யப்பட்டதா என எனக்கு தெரியவில்லை என்று ராய் லட்சுமி கூறினார்.

பெயர்

பெயர்

ஜூலி 2 ஒரு நடிகையின் கதை தான். அந்த நடிகையின் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. படத்தை பார்க்கும்போது உங்களுக்கே அது யார் என தெரியும் என்றார் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X