அடேங்கப்பா.. அபிராமிக்கும் ஜூலிக்கும் உள்ள 100% ஒற்றுமைகள்!
சென்னை: அபிராமிக்கும் ஜூலிக்கும் ஏராளமான விஷயங்கள் 100% ஒத்துபோகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமிக்கு சமூக வளைதளங்களில் மட்டுமின்றி மக்களிடையேயும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அபிராமியின் நடவடிக்கையை பார்த்த மக்கள் அவரை ஜூலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்றதால் வீர தமிழச்சி என சமூக வலைதளங்களில் வைரலான ஜூலிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜூலியை வெறுத்த மக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஜூலியின் உண்மை முகம் நிஜ கேரக்டரும் துல்லியமாக படம் பிடித்து காண்பிக்கப்பட்டது. பிக்பாஸ் முதல் சீசனில் ஓவர் ஆக்ட், டிராமாக்கள், காஸிப், பொய், குரூப்பிஸம் என விஷயங்களால் மக்கள் ஜூலியை வெறுத்தனர்.

பல விஷயங்கள் ஒத்துப்போகின்றன
இந்நிலையில் தற்போதைய சீசனில் பங்கேற்றுள்ள அபிராமி பல விஷயங்களில் ஜூலிக்கே டஃப் கொடுக்கிறார். ஜூலிக்கும் அபிராமிக்கும் ஏராளமான விஷயங்கள் ஒத்துப்போகின்றன. அவற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

ஆசை தீர கட்டிப்பிடித்த அபிராமி
முதல் சீசனில் ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 2வது நாளே தன்னை கட்டிப்பிடிக்க யாரும் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கூறி வருத்தப்பட்டார். இதை கப்பென பிடித்த பிக்பாஸ் ப்ரமோவில் போட்டு முதல் நாளிலேயே அவரின் மானத்தை வாங்கினார். இந்த சீசனில் அபிராமி கவினை அழைத்து ஆசைதீர கட்டிப்பிடித்தே விட்டார்.

கவின் மேல் காதல்
முதல் சீசனில் ஜூலிக்கு ஆரவ் மேல் காதல் ஏற்பட்டது. ஆரவை பார்த்தால் என்னென்னவோ செய்கிறது என்றார். இந்த சீசனில் அபிராமி நடிகர் கவின் மீது காதல் கொண்டுள்ளார்.

மீராவுக்கு எதிராக குரூப்
ஜூலி ஓவியாவுக்கு எதிராக காயத்ரி, ரைசா, சக்தி, நமீதா என ஒரு குரூப்பை வைத்து குரூப்பிஸம் செய்தார். இந்த சீசனில் அபிராமி, வனிதா, சாக்ஷி, ஷெரின், என ஒரு குரூப்பை வைத்து குரூப்பை வைத்து மீராவுக்கு எதிராக செயல்படுகிறார்.

மீரா குறித்து காஸிப்
முதல் சீசனில் ஜூலி, ஓவியா குறித்து பேசாத பேச்சல்ல, எப்போதும் அடுத்தவரை பற்றி காஸிப் செய்வதைதான் வேலையாக வைத்திருந்தார். இந்த சீசனில் அபிராமி மீரா குறித்து பேசுவையே வேலையாக கொண்டுள்ளார்.

அபிராமி போடும் டிராமா
முதல் சீசனில் ஜூலி அடிக்கடி அழுது சிம்பத்தி கிரியேட் செய்ய ட்ரை பண்ணுவார். தற்போது அதே டிராமாவை அபிராமி போடுகிறார். ஜூலியின் பாடி லாங்குவேஜும் பார்வையும் ஓரளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, ஆனால் அபிராமியின் பாடி லாங்குவேஜ் பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கவர்ச்சி காட்டும் அபிராமி
ட்ரெஸ் விஷயத்திலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தில் அபிராமி ஜூலிக்கே டஃப் கொடுக்கிறார். பிக்பாஸ் வீட்டிலேயே மிகவும் கவர்ச்சியாக ட்ரெஸ் போடுபவர் அபிராமிதான். நிகழ்ச்சி ஒளிபரப்பான 3 நாட்களிலேயே இத்தனை ஒற்றுமைகள் தெரிந்துவிட்டன. போக போக இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











