எனக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமா?: சினேகனுடன் மோதும் ஜூலி
சென்னை: இன்று பிக் பாஸ் வீட்டில் ஜூலி சினேகனுடன் மோதுகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு மக்களிடம் கெட்டப் பெயர் எடுத்தவர் ஜூலி. அவர் ஜல்லிக்கட்டுக்காக போராடியதை மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஜூலி பழையபடியே நடந்து கொள்கிறார்.
சினேகன்
எனக்கு வெளியே ஒரு பெயர் உள்ளது அது போலி. அதை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தான் என்று கூறி ஜூலி தடவியல் நிபுணர் சினேகனுடன் மோதுகிறார்.

கோபம்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியா, ஜூலி இடையேயான சண்டையை நடித்துக் காட்டினர். ஆர்த்தி ஜூலி போன்று நடித்தார். இதை பார்த்த ஜூலி கோபப்பட்டு சீன் போட்டார்.

ஜூலி
பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஜூலியை பிடிக்கவில்லை போன்று. இதை ஜூலியே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்கள்
ஜூலியை முதலில் வெளியே அனுப்பி வைய்யா பிக் பாஸ் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். சிலரோ ஜூலிக்கு ஆர்த்தி பரவாயில்லை போன்று என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











