Vijay Vs Julie: களத்தில் சந்திப்போம் விஜய் அண்ணா.. விரட்டி விரட்டி வீடியோ போடும் ஜூலி
சென்னை: நடிகர் விஜய் தான் போட்டியிடுவதாக அறிவித்த இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியான பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். இந்த தேர்தலில் திமுகவும் தவெகவுக்கும் தான் போட்டியே என்று விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை கையாண்டு வரும் நிலையில், நடிகை ஜூலியோ திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி, விஜய்க்கும் தனக்கும் தான் போட்டியே என்று தெரிவித்து வருகிறார்.
விஜய்யின் வேலூர் கூட்ட பேச்சை விமர்சித்த ஜூலிக்கும் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் என்பது இன்னும் தீர்ந்ததாக தெரியவில்லை. விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் மிகவும் மோசமாக தன்னை விமர்சிப்பதகாவும், ஆபாசமாக சித்தரிப்பதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் ஜூலி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஜூலியின் புகாருக்குப் பின்னரும் கூட விஜய் ரசிகர்கள் அமைதியாக இருக்கவில்லை. மேலும் விஜய் தனது தரப்பில் கூட தனது தொண்டர்களையும் ரசிகர்களையும் கண்டிக்கவில்லை,

இதனால் ஜூலி விஜய்யை எதிர்த்து பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்யக் களமிறங்கிவிட்டார். இப்படி இருக்கையில் விஜய் தனது வேட்பு மனுவை அளித்துவிட்டு, பிரச்சாரத்தை தொடர்கையில் திமுக அரசை காட்டமாக விமர்சித்தார். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யை விமர்சித்து, ஜூலி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஜூலி விடியோ: அதில், " முதலில் ஒழிக்க வேண்டியதே ஃபாசிச ஒன்றிய சர்காரும், அதற்கு விலை போன உங்களையும் தான். இதற்கு முன்னர் நான் வீடியோ பதிவிட்டது என்னை மிரட்டியது, கேவலமாக பேசியதற்காகத்தான். ஆனால் இப்போது என்னிடம் உங்களை விமர்சிக்க இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், உங்களுக்கு எதிராக எந்த பெண் பேசினாலும் அவர்களை , உங்களது வல்கர் வாரியர்ஸை வைத்து மோசமாக சித்தரித்து பேசுவதைப் பார்த்து ரசிக்கும் நீங்கள் எக்காரணம் கொண்டும் வெல்லக் கூடாது.

தமிழ்நாட்டில் கால் பதிக்க: இரண்டாவது காரணம் ஃபாசிச கட்சிகள் ஓட்டைப் பிரித்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் வந்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்களைத்தானே அவர்கள் கடைசியாக 'ஏ' டீமாக இறக்கி இருக்கிறார்கள். அது நீங்கள் உங்கள் வேட்பாளர்களை வாசிக்கும் போதே தெரிகிறது. பலரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸில் இருந்து வந்தவர்கள் என்று. உங்களின் வல்கர் வாரியர்ஸ், திமுக கடைசி ஆயுதமாக ஜூலியை அனுப்பி உள்ளது என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.
திமுக வேட்பாளர்களை தொடக் கூட முடியாது: திமுக மாபெரும் இயக்கம், அதன் கட்டமைப்பு என்ன?, கொள்கைகள் என்ன? அவர்கள் தமிழ்நாட்டிற்குச் செய்த வளர்ச்சித் திட்டங்கள் என்ன? திமுகவை காப்பாற்ற எல்லாம் யாரும் வரவேண்டாம். உன்னைப் போல பிரபல்யத்தையும் வல்கர் வாரியர்ஸையும் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் நிற்கிறீர்கள் அல்லவா, உங்களை எதிர்க்க என்னைப் போன்ற சாமானியப் பெண்ணே போதும். திருச்சி கிழக்கில் இனிகோ அண்ணாவையும் , பெரம்பூரில் ஆர்.டி. சேகர் அண்ணாவையும் உங்களால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீ நிருத்தி இருக்கும் மற்ற ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் எல்லாம் அவர்களாகவே தோற்றுவிடுவார்கள்" என்று பேசி வீடியோ பகிர்ந்துள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











