‘அம்மன் தாயி’... அம்மன் + நாயகி.. டபுள் ஆக்சனில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜுலி!
அம்மன் தாயி படத்தில் ஜூலி அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் புகழ் ஜூலி அம்மன் தாயி என்ற பக்திப் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.
ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலிக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்பது தான் தனது ஆசை எனத் தெரிவித்தார் ஜூலி.
அதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அவருக்கு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது.

அனிதாவாக ஜூலி:
அதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்காக போராடி, தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கைப் படத்தில் ஜூலி நடிப்பதாக தகவல் வெளியானது. இதில், அனிதாவின் கதாபாத்திரத்தில் ஜூலி நடிப்பதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

அம்மன் வேடத்தில் ஜூலி:
இந்நிலையில், அம்மன் தாயி என்ற பக்தி கலந்த சமூகபடத்தில் ஜூலி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நாயகி மற்றும் அம்மன் என இரட்டை வேடத்தில் அவர் நடிக்கிறார். புதுமுகம் அன்பு நாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தினை கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள்.

பயிற்சி:
‘அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்?' என்பது தான் கதைக்களமாம். கிறிஸ்தவரான ஜூலி இந்த வேடத்தில் நடிப்பதற்காக விரதம் இருந்ததாகவும், வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

பாடல் பாக்கி:
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் சில முக்கிய காட்சிகள் ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.


Click it and Unblock the Notifications











