கிட்னி விற்பனை மோசடியில் தொடர்பா? TVK நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் மீது புகார் கொடுத்த ஜூலி
சென்னை: நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் விஜய்யை யாராவது எதிர்த்து விமர்சித்தால் அவர்களை மிகவும் காட்டமாக விமர்ப்பதைக் கடந்து மிகவும் மோசமாக, அவமரியாதையாக, நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் விஜய் வேலூருக்கு சென்று தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகையில் குட்டிக் கதை ஒன்று சொன்னார். அந்த கதையை விமர்சித்து நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் ஜூலி வீடியோ பதிவிட்டிருந்தார்.
விஜய்யை காட்டமாக விமர்சித்ததால் விஜய் ரசிகர்கள் சிலர் ஜூலிக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். ஆனால் பலரும் ஜூலியை மோசமாக விமர்சித்தனர். குறிப்பாக ஜூலிக்கும் தமிழ்நாட்டில் நடைபெற்ற கிட்னி திருட்டுக்கும் சம்பந்தம் உள்ளது என்றும் தெரிவித்தனர். அதேபோல் ஜூலியின் குடும்பத்தினர். ஜூலியின் கணவர் என பலரையும் மிகவும் அவமானகரமான முறையில் விமர்சித்தனர்.
இப்படி இருக்கையில் நடிகை ஜூலி இவற்றுக்கு எல்லாம் தொடக்கத்தில் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜய் ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது புகார் அளித்துள்ளார்.

அதாவது, " கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தவெக நிர்வாகி உள்பட 8 பேர் மீது ஜூலி புகார். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை" வைத்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகாரைப் பெற்றுக் கொண்டு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன் அதிருப்தி: இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் விஜய் ரசிகர்களும் தவெக நிர்வாகிகளும் தேர்தல் வரையிலாவது அமைதியாக இருந்தால் அது விஜய்க்கும் தவெக கட்சிக்கும் மிகவும் நல்லதாக அமையும். ஏற்கனவே ரஜினி, கமல், சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் மோசமாக விமர்சித்து பெரிய அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கி வைத்துள்ளனர். இது பெரும்பான்மையானவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











