ஆமாம்.. எனக்கு 3 கல்யாணம் ஆகிடுச்சு.. வல்கர் வாரியர்ஸ்னு வச்சு விளாசிய ஜூலி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலிக்கும் தவெகவிற்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது. தொடர்ந்து விஜய்யை கிண்டல் செய்து வரும் ஜூலி, இன்று மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு விஜய்யை மோசமாக கலாய்த்துள்ளார்.

கடந்த வாரம் தமிழகவெற்றிக்கழம் வேலூரில் பிரச்சார கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில், பேசிய விஜய் வழக்கம் போல ஒரு குட்டி கதை கூறியிருந்தார். அதை விமர்சனம் செய்து பிக்பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், விஜய் நீங்கள் கூறிய காளை மாடு கதையை கேட்டு உங்கள் ரசிகர்கள் விபரீத முடிவு எடுத்துவிட போகிறார்கள். 50யை 500 ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள் என பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து இணையத்தில் தவெக தொண்டர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

Vijay TVK Julie
Photo Credit:

பிக் பாஸ் ஜூலி: அதைத்தொடர்ந்து இரண்டாவது வீடியோ வெளியிட்ட ஜூலி, "விஜய் அண்ணா உங்கள் வேலூர் பரப்புயை பார்த்து உங்கள் ரசிகர்கள் ஏடாகூடமா ஏதாவது செய்துவிடுவார்கள் என நினைத்துத்தான் அந்த வீடியோவை போட்டோன். ஆனால், உங்கள் ரசிகர்கள்.. டிவிகே வல்கர் வாரியர்ஸ் என்னை கடுமையாக கெட்டக்கட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள். இதைத்தான் சொன்னேன் உங்க ரசிகர்கள் மைனராக இருக்கிறார்கள், இல்லை என்றால் மண்டையில் மைனராக இருக்கிறார்கள் என கடுமையாக பேசி இருந்தார். இந்த வீடியோக இணையத்தில் டிரெண்டானதை அடுத்து, அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் ஜூலினை தனிப்பட்ட முறையில் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

வல்கர் வாரியர்ஸ்: அதற்கு தற்போது பதில் அளித்து இருக்கும் ஜூலி, ஹாய்..... வல்கர் வாரியர்ஸ், இவர் தான் என் மூன்றாவது புருஷன், இவருக்கும் எனக்கும் இப்போது தான் முதன்முறையா திருமணம் நடந்தது. இதற்குமுன் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் கல்யாணம் நடந்தது. அதற்கு முன் அம்மன் தாய் படத்தில் கல்யாணம் நடந்தது. வல்கர் வாரியர்ஸ் சொல்வது போல இது எனக்கு 3வது திருமணம் தான். முகத்தை பார்த்தாக்கூடவா தெரியாது, இதே போல, தேர்தல் நேரத்தில் வேறு எந்த சின்னத்திலாவது ஊதிவிட்டுவிட்டு வந்துவிடாதீர்கள், சரியாக 'மடக்கு ஊதி'யை பார்த்து ஓட்டுப்போடுங்கள். அப்புறம் உங்க தலைவர் டெபாசிட் கூட வாங்காமல் போய்விட போகிறார் என விஜய்யை கடுமையாக கிண்டலடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X