»   »  டிஆர்பி படுத்தும் பாடு: நேத்து ராத்திரி ஜூலியை கதறவிட்டுட்டாங்க!

டிஆர்பி படுத்தும் பாடு: நேத்து ராத்திரி ஜூலியை கதறவிட்டுட்டாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை கதற விட்டு பார்வையாளர்களின் அனுதாபத்தை பெறலாம் என நினைத்து கோபத்தை கிளப்பிவிட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியையே ஆளாளுக்கு குறி வைக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை விரட்டிவிட அங்குள்ளவர்கள் ஆவலாக உள்ளனர்.

ஜூலியை வைத்தே நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்துவிட்டனர்.

அழுகை

அழுகை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மேடையில் ஏறி நான் வெற்றி பெறுவேன் ஏனென்றால் என்று ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறினார்கள். அப்போது ஜூலி மட்டும் கதறி அழுதார்.

சபதம்

சபதம்

நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். எனக்கு பொய் பேசவும் தெரியாது, ஆளுக்கு தகுந்தது போன்று நடிக்கவும் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறினார் ஜூலி.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்னை மட்டமாக பார்த்து புண்படுத்துகிறார்கள் என்று ஜூலி சோகமாக தெரிவித்தார். தன்னை வெறுப்பவர்கள் முன்பு ஜெயித்துக் காட்ட விரும்புகிறார் ஜூலி.

நெட்டிசன்ஸ்

ஜூலிய பரிதாப கோட்டாவுக்குனு வச்சி இருக்கானுங்க போல. ஜூலிலாம் இப்ப வெளிய போகாது, அத வச்சுதான் பெருசா ப்ளான் பண்ணிருப்பானுக என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Julie has become the victim of TV's TRP hunger. She is the one who is targeted now in Big Boss show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil