இவரு உங்க அண்ணனா.. அப்போ சினேகன் கோவிச்சுக்குவாரே.. வழக்கம் போல் போட்டோ போட்டு திட்டு வாங்கிய ஜூலி!

பிக் பாஸ் ஜூலி இயக்குனர் பி.வாசு மற்றும் அவரது மகன் சக்தியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Julie Tweet : பொய் மூட்டை ஜூலிக்கு பாராட்டு-வீடியோ

சென்னை: நடிகர் சக்தியை தனது அண்ணன் எனவும், அவரது தந்தை இயக்குனர் பி.வாசுவை தனது தந்தை எனவும் குறிப்பிட்டு நடிகை ஜூலி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் தான் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட். மூன்று சீசன்கள் முடிந்து விட்டாலும் கூட, முதல் சீசனின் பாதிப்புகள் இன்னும் நீங்காமல் இருக்கின்றன. அதில் கலந்து கொண்டவர்களை இன்றளவும் மக்கள் மறக்கவில்லை.

அதிலும் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தால் இன்றளவும் சமூகவலைதளங்களில் திட்டு வாங்கி வருகிறார் நடிகை ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிதீவிரமாக செயல்பட்டதன் மூலம் வீரத்தமிழச்சியாக அறியப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. அதன் காரணமாகவே பிக் பாஸ் அவரை முதல் சீசன் போட்டியாளராக்கினார்.

பிக் பாஸ் மூலம் அவப்பெயர்

ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்டவிதம், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கடுமையான அவப்பெயருக்கு ஆளானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாங்கிய நல்லபெயரை, பிக் பாஸ் மூலம் கெடுத்துக்கொண்டார்.

தொடரும் கேலி

தொடரும் கேலி

இதனாலேயே சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் ஜூலி. படங்களில் நடித்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தாலும் அவரால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியவில்லை. பல மாதங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமலே இருந்த ஜூலி, சமீபகாலமாக தான் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளார்.

புதிய புகைப்படம்

புதிய புகைப்படம்

இந்நிலையில் இயக்குனர் பி.வாசு மற்றும் அவரது மகன் சக்தி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜூலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தான் சம்பாதித்த உறவு என்னுடைய அண்ணன் மற்றும் அப்பா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் வாழ்த்து

நெட்டிசன்கள் வாழ்த்து

இதைப் பார்த்த பெரும்பாலான நெட்டிசன்கள் ஜூலியை கலாய்க்காமல் வாழ்த்து தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே கிண்டலடிக்கும் தொனியில் சில கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

டிரிக்கர் சக்தி

டிரிக்கர் சக்தி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சக்தியும், காயத்ரியும் மட்டுமே அதிக நட்புடன் பழகி வந்தனர். இதனாலேயே முதல் சீசனின் சண்டைக்கோழிகளாக அவர்கள் அறியப்பட்டனர். ஜூலி அவர்களுடன் நட்பாக பழகி வந்தபோதும், அவர்கள் அளவாகவே உறவாடினர்.

இதென்ன புதுக்கதை

இதென்ன புதுக்கதை

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சக்தியை ஜூலி அண்ணன் எனக் குறிப்பிட்டுள்ளது மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சேரப்பாவும், லாஸ்லியாவும் பழகியது போல், அப்படி ஒன்றும் முதல் சீசனில் அவர்கள் பாசமலர்களாக இருக்கவில்லையே, பிறகெப்படி இப்படி ஒரு திடீர் பாசம் வந்தது என அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

சினேகன்

அதோடு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, முதலில் நடிகர் பரணியைத் தான் ஜூலி அண்ணன் என அழைத்து வந்தார். பிறகு சினேகனை பிக் பாஸ் சக போட்டியாளர்கள் அண்ணன் என அழைத்தனர். ஜூலியின் இந்தப் பதிவால் சினேகன் கோபித்துக் கொள்ளப் போகிறார் என இவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X