ஜூலியின் வயதான தோற்ற புகைப்படம்... நெட்டிசன்களுக்கு கிடைச்ச லேட்டஸ்ட் அவல்பொரி!

By Vignesh Selvaraj

சென்னை : ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார்.

ஒரு சில படங்களிலும் தலையைக் காட்டி வருகிறார். இந்நிலையில் ஜூலி வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் உலா வருகிறது.

இவை ஜூலி நடிக்கவிருக்கும் 'உத்தமி' படத்தின் புதிய கெட்டப் என்று கூறப்படுகிறது.

ஜூலி

ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரையும் தனது தைரியமான குரலின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜூலி. அப்போது இவரை வீரத் தமிழச்சி, ஜல்லிக்கட்டு ஜூலி என்றெல்லாம் அடைமொழியிட்டு அழைத்தனர்.

மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த ஜூலி

மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த ஜூலி

ஆனால் இவர் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். அந்நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை அனைத்தும் அனைவராலும் வெறுக்கத்தக்க வகையில் இருந்தது.

விளம்பரத்தில் ஜூலி

விளம்பரத்தில் ஜூலி

தற்போது ஜூலி, அதில் கிடைத்த அறிமுகத்தின் மூலம் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர், அதனைத் தொடர்ந்து திரைப்படங்கள் என்று படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அப்பள விளம்பரம் ஒன்றிலும் நடித்தார். அதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

ஜூலி புகைப்படம்

ஜூலி புகைப்படம்

இந்த நிலையில், தற்போது ஜூலி வயதான தோற்றத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான அந்த புகைப்படமானது கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு முரட்டுத் தீனி போடுவதாக அமைந்துள்ளது.

நெட்டிசன்கள் குஷி

நெட்டிசன்கள் குஷி

சும்மாவே ஜூலியை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள் இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் செம குஷியாக தற்போது கலாய்த்து வருகின்றனர். நெட்டிசன்கள் சும்மா இருந்தாலும், ஏதாவது ஒன்று அவ்வப்போது சிக்கி இரையாகி வருகிற்து,

உத்தமி பட புகைப்படம்

உத்தமி பட புகைப்படம்

இந்தப் புகைப்படம் எதற்காக எடுக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. ஒருவேளை, இது ஜூலி நடிக்கும் 'உத்தமி' படத்தின் காட்சியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Read more about: julie பிக்பாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X