முகம் முழுக்க நாய்க்குட்டியை நக்கவிட்டு..முத்தம் கொடுக்கும் ஜூலி.. பார்த்தும்மா..என பதறும் ஃபேன்ஸ்!

சென்னை: முகம் முழுக்க நாய்க்குட்டியை நக்கவிட்டு கொஞ்சியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸ் போராட்டத்தில் சின்னம்மா சின்னம்மா அவர் போட்ட முழக்கம் பெரும் வைரலானது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் அதிகளவு நெகட்டிவ் ரீச்தான் கிடைத்தது.

திட்டாதவர்களே இல்லை

திட்டாதவர்களே இல்லை

பொய் சொல்வது, ஓவியாவை டார்கெட் செய்வது, காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு குரூப்பிஸம் என பட்டையை கிளப்பினார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்க்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தார்.

யார் சண்டை மூட்டினாலும்

யார் சண்டை மூட்டினாலும்

இப்போது வரை பிக்பாஸ் வீட்டில் யார் சண்டை மூட்டி விட்டாலும் இவர்தான் இந்த சீசனின் ஜூலி என்று சொல்லி வருகின்றனர் ரசிகர்கள். என்னதான் நெகட்டிவ் ரீச் கிடைத்தாலும் பிக்பாஸுக்கு பிறகு ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

பேல போட்டோ ஷூட்

பேல போட்டோ ஷூட்

உத்தமி, அனிதா எம்பிபிஎஸ், அம்மான் தாய் என பல படங்களில் கமிட்டானார் ஜூலி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ஜூலி தொடர்ந்து ஏராளமான போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

முத்தம் கொடுப்பது போல்

முத்தம் கொடுப்பது போல்

தொடர்ந்து ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்துவரும் ஜூலி, அண்மையில் ஆண் நண்பர் ஒருவருடன் முத்தம் கொடுப்பது போன்ற நெருக்கமான வீடியோவை ஷேர் செய்தார்.

நாய்க்குட்டியுடன் விளையாட்டு

நாய்க்குட்டியுடன் விளையாட்டு

இதனை பார்த்த நெட்டிசன்கள், இவர்தான் உங்களின் பாய் ஃபிரண்ட்டா என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார் பிக்பாஸ் ஜூலி.

முகம் முழுக்க நக்கவிட்டு

கறுப்பு நிற நாய்க்குட்டியை முகம் முழுக்க நக்க விட்டு அதனுடன் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடுகிறார் ஜூலி. பார்க்க க்யூட்டாக உள்ளது அந்த வீடியோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த வீடியோ ரொம்ப இம்ப்ரஸிவாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

நீங்கள்தான் உதாரணம்

நீங்கள்தான் உதாரணம்

இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்க ரொம்பவே மாறிவிட்டீற்கள் என்றும் கூறி வருகின்றனர். மேலும் நெட்கட்டிவிட்டியை வைத்தும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு நீங்கள்தான் உதாரணம் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X