ஆபாசமாக பேசிய தவெக பெண்கள்.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி.. ஆதாரத்தோடு ரெடியா இருக்காங்கப்பா

சென்னை: தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (தவெக), எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொள்கை சார்ந்த விமர்சனங்களை விட தனிமனிதத் தாக்குதல்கள், வீடியோ வார், மீம்ஸ், பழைய பதிவுகளை தோண்டி எடுக்கும் டிஜிட்டல் அரசியல் என இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், தற்போது தவெக பெண்கள் பேசிய பழைய ஆபாச வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ள திமுக ஆதரவாளர் ஜூலியின் வீடியோ இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது, தவெக அரசின் அமைச்சரும் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கில்லி சரத் என்கிற சரத்குமார் தொடர்பான வீடியோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை எதிர்க்கட்சியினர் தீவிரமாக முன்வைத்து, சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்றும், அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Julie Shares Old Videos Fresh Social Media Clash Erupts Between TVK and DMK Supporters

ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த அமைச்சர் சரத்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வீடியோவில் இடம்பெற்றது போதைப்பொருள் அல்ல என்றும், தனது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை நுணுக்கிக் கொடுத்த தருணம்தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். இதனால் விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்தது.

இதற்கிடையில், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதன் பின்னணியில் அமைச்சர் சரத்குமாரின் முன்னாள் நண்பரான சரண் இருப்பதாக தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் குற்றஞ்சாட்டினர். திமுக ஆதரவாளரான சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தவெக ஆதரவாளர்கள் காவல்துறையிலும் புகார் அளித்தனர். அந்தப் புகாரை அளித்த தவெக ஆதரவாளர் கிருத்திகா, செய்தியாளர்களிடம் பேசுகையில், சரண் தன்னை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வீடியோக்கள் வெளியிட்டு வருவதாகவும், அவரது சமூக வலைதள கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கிருத்திகாவுடன் வந்திருந்த மேலும் இரு பெண்கள், திமுக ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியதும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக ஆதரவாளரான ஜூலி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Julie Shares Old Videos Fresh Social Media Clash Erupts Between TVK and DMK Supporters

ஆபாச பேச்சு: அந்த வீடியோவில், தற்போது தவெக ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் அந்த இரு பெண்களும் கடந்த காலங்களில் திமுக ஆதரவாளர்களை மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் விமர்சித்துப் பேசிய பல்வேறு வீடியோ கிளிப்களை ஒன்றாகத் தொகுத்து ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் கடுமையான விவாதம் வெடித்துள்ளது.

"மற்றவர்களை நாகரிகம் பற்றி பேசும் இவர்கள், கடந்த காலத்தில் பேசியது என்ன?" என்ற கேள்வியை எழுப்பி திமுக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரம், தவெக ஆதரவாளர்கள் இந்த வீடியோ அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி எதிர்வாதம் செய்து வருகின்றனர்.

டிஜிட்டல் மோதல்: இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த டிஜிட்டல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் விவாதங்கள் கொள்கைகளைத் தாண்டி தனிமனித விமர்சனங்கள், பழைய வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளை மையமாகக் கொண்டு நகர்வது தமிழக அரசியலில் புதிய போக்காக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஜூலி வெளியிட்டுள்ள இந்த ஆதார வீடியோவும் அந்த டிஜிட்டல் யுத்தத்தில் அடுத்த பரபரப்பான அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X