Julie: நாட்டை ஆட்டைய போட பாக்கும் திரை தளபதி.. விஜய்யிடம் நேரடியாக மோதிய ஜூலி!
சென்னை: வெல்லும் தமிழில் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிக் பாஸ் பிரபலம் ஜூலி, திரை தளபதிகள் ஓட்டை பிரித்து, உள்ளே நுழைந்து நாட்டை ஆட்டையை போட வேண்டும் என நினைக்கிறார்கள் என மறைமுகமாக நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியை விமர்சித்துப் பேசினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகை ஜூலி, என்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்து இருப்பீர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள், சில சீரியல் படங்களில் கூட பார்த்து இருப்பீர்கள். ஆனால், எனக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது அரசியல் தளம் தான். அந்த தளத்தில் நான் ஒரு சாதாரண பெண்ணாக, மக்களில் ஒருத்தியாக என் கடுகளவு பங்கு இருக்க வேண்டும் என நினைத்து ஒரு விஷயத்தை செய்தேன். இன்று வரைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மொத்த பெருமையையும் நான் திருடி விட்டேன் என நினைக்கிறார்கள். தயவுசெய்து அப்படி நினைக்காதீர்கள்.

பிக் பாஸ் ஜூலி பேச்சு : இத்தனை நாட்களாக பேசாத ஜூலி, இப்போ பேசுவதற்கான காரணம் என்ன என பலர் விஷயத்தை சொல்கிறார்கள். அதாவது இந்த திராவிட அரசியலை பார்த்து வளர்ந்த நாமும், நம்மை வளர்த்து விட்ட திராவிட அரசியலையும் ED ரெய்டு, சிபிஐ ரெய்டுகளை வைத்து, இந்த மாபெரும் இயக்கத்தின் மீது எந்த ஒரு தூசியும் பட்டுவிடக் கூடாது என்பதில் என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இப்போது குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது நிறைய திரை தளபதிகள் இருக்கிறார்கள், அவர்கள் ஓட்டை பிரித்து, உள்ளே நுழைந்து நாட்டை ஆட்டையை போட வேண்டும் என நினைக்கிறார்கள். இதை டெல்லியிலும் செய்து இருக்கிறார்கள், மற்ற மாநிலங்களிலும் செய்து இருக்கிறார்கள். ஆனால், என்னைக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். எத்தனை திரை தளபதிகள் வந்தாலும், மிசா களத்தில் இளைய தளபதி அவர் தான், அன்றைய தளபதியும் அவர்தான், இன்றைய தளபதியும் அவர்தான்.
யாராலும் எதுவும் செய்ய முடியாது: இது தமிழ்நாடு, இது திராவிட கோட்டை இதில் எந்த பிராமின கடப்பாரையை கொண்டோ, எந்த திரை தளபதிகளை கொண்டோ யாராலும் எதுவுமே செய்து விட முடியாது. ஏனென்றால் இந்த கோட்டை கதவுகளுக்கு முன்னால், எங்களைப் போன்ற சின்ன சின்ன தடை தாண்டிகள் இருக்கிறோம். உங்களால் எங்களை அசைத்து பார்க்க முடியாது, எங்கள் மேல் எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறுகளை பரப்புங்கள், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தாலும், அதற்கெல்லாம் பயந்து ஓடும் ஆட்கள் நாங்கள் கிடையாது. சண்டை செய்து பழகிய கூட்டம் இது. ஜெயிக்கிறோமா தோற்கிறோமோ என்பதைப் பற்றி என்றைக்குமே எங்களுக்கு கவலையே கிடையாது. இன்றைக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களின் பின்னால் நாங்க இருப்போம் என்று ஜூலி ஆவேசமாக பேசி இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு, மேயல் பிரியா ஆகியோர் இருந்தனர்.


Click it and Unblock the Notifications











