குஷ்புவின் டிவிட்டை பாராட்டிய ஜூலி.. காயத்ரி அக்கா கோவிச்சுக்க போறாங்க.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: குஷ்புவின் டிவிட்டை பாராட்டிய பிக்பாஸ் ஜூலியை நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான பொய்களை கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டினார். சக போட்டியாளரான காயத்ரி ரகுராமுடன் இணைந்து நடிகை ஒவியாவை டார்கெட் செய்த ஜூலி அவர் மீது இல்லாததையும் பொல்லாததையும் கூறினார்.

தத்துவங்கள்
இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஜூலி. இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் ஜூலி. நடிகையான ஜூலி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தத்துவங்களையும் பேசி வருகிறார்.

பிரதமர் மோடி உரை
அவர் என்ன பேசினாலும், எதை செய்தாலும் அதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் நடிகை ஜூலி தற்போது ஒரு கமெண்டை பதிவு செய்து வாங்கிக் கட்டி வருகிறார். அதாவது நேற்று இரவு பிரதமர் மோடி உரையாற்றினார்.

கோமாளிகளே
அதனை நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு விமர்சித்திருந்தார். அதில், ஒரே ஒரு டவுட். பிரதமர் நேற்று எந்த மொழியில பேசினாரு? நான் ஏன் தமிழில் டைப் பண்ணவில்லை என்று கேட்கும் கோமாளிகளே டிவிட்டர் ஒரு சர்வதேச பிளாட்ஃபார்ம்.

செம மேடம்..
நான் தமிழ்ல டைப் பண்ணனும்னா பிரதமர் மோடியும் தமிழில்தான் பேச வேண்டும். பழமையான மொழியான தமிழ் இருக்கும் போது பிரதமர் ஏன் இந்தியில் பேச வேண்டும்? இவ்வாறு நடிகை குஷ்பு டிவிட்டியிருந்தார். இதனை தனது டிவிட்டர் பக்க்ததில் ஷேர் செய்த ஜூலி செம மேம் என பாராட்டியிருந்தார்.

கோவிச்சுக்க போறாங்க
ஜூலியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், காயத்ரி அக்கா கோவிச்சுக்க போறாங்கக்கா.. என கிண்டலடித்துள்ளனர். மேலும் உனக்கெல்லாம் ஓவியாதான் கரெக்ட்.. 5 செகன்ட் முன்னாடின்னு ஆரம்பிக்காதே என்றும் ஜூலி, காயத்ரி அக்கா உன்னை கொல்லப் போறாங்க என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











