ரொம்ப நாளைக்கு பிறகு நெட்டிசன்களிடம் பாராட்டு வாங்கிய பிக் பாஸ் ஜூலி.. என்ன விஷயம் தெரியுமா?
மாணவர்கள் இயக்கும் குறும்படங்களில் இலவசமாக நடிக்க உள்ளதாக ஜூலி அறிவித்துள்ளார்.
Recommended Video
பிக் பாஸ் வீட்டில் பொய் மூட்டையாக உலா வந்ததால் தான் ஜூலிக்கு இந்த நிலை. ஜல்லிக்கட்டு போரோட்டத்தில் வீரத்தமிழச்சியாக விஸ்வரூபம் எடுத்த ஜூலியை காமெடி பீசாகவே மாற்றிவிட்டது பிக் பாஸ். சென்னை: பிக் பாஸ் ஜூலி செய்த ஒரு காரியத்தை முதல் முறையாக நெட்டிசன் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக பிக் பாஸ் ஜூலி செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் கிண்டல் செய்வது தான் நெட்டிசன்களின் வேலை. இதனால் அவர் சமூக வலைதளங்களில் பதிவுகள் போடுவதையே நிறுத்தி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் பொய் மூட்டையாக உலா வந்தததால் தான் ஜூலிக்கு இந்த நிலை. ஜல்லிக்கட்டு போரோட்டத்தில் வீரத்தமிழச்சியாக விஸ்வரூபம் எடுத்த ஜூலியை காமெடி பீசாகவே மாற்றிவிட்டது பிக் பாஸ்.

சிக்கலில் படங்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அம்மன் தாயி, டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார். ஆனால் எந்த படமும் ரிலீசாகவில்லை. ஜூலி நடிப்பதாலேயே டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் படம் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் ஜூலி ஒரு முக்கிய அறிப்பை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் அவர், "ஒவ்வொரு படமும் நம் வாழ்வின் பிரதி. ஒரு சிறிய முன் முயற்சியாக, வலுவான கதைகளுடன் இயக்க துடிக்கும் சகோதர சகோதரிகள் வரவேற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ நான் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன். என்னை அணுக டிவிட்டரில் தொடர்பு கொள்ளவும்", என பதிவிட்டுள்ளார்.
ஜூலிக்கு பாராட்டு
ஜூலியின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை காஜல் பசுபதி, ஜூலியின் இந்த முயற்சியை சூப்பர் பேபி என பாராட்டியுள்ளார். வழக்கமாக ஜூலியை கலாய்ப்பவர்கள் கூட வாழ்த்தியுள்ளனர்.
வஞ்சம் வேண்டாம்
"நாளைய சிறந்த இயக்குனர்கள் உருவாக குறும்படங்களில் நடிக்க முன் வருவது நன்றி. ஜல்லிகட்டில் என்ன நோக்கில் குரல் கொடுத்தீர்கள் என்று தெரியாது. ஆனால் அந்த பிரபலத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிக் கொண்டீர்கள். தயவு செய்து நாளை இயக்குனர்களுக்கு வஞ்சம் இல்லா தன்மையுடன் உதவுகள்", என இவர் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











